Jailer: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா... மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயம்... கோர்த்துவிட்ட ப்ளூ சட்டை

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 28) மாலை நடைபெறுகிறது.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கான ஏற்பாடுகளின் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், ஜெயிலர் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 Jailer: One person was injured due to the Jailer Audio launch event

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாட்டில் விபத்து:சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் கம்பேக் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், ராக்ஸ்டார் அனிருத், சன் பிக்சர்ஸ் என பிரம்மாண்ட கூட்டணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் படுகாயம் அடைந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் வேறு யாரும் காயம் அடைந்தார்களா என்பது குறித்து எதுவும் தகவல் இல்லை. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா நடக்காதா என விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

 Jailer: One person was injured due to the Jailer Audio launch event

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா குறித்த எதிர்பார்ப்பு ஒருபக்கம் புயலாக சுழன்றடிக்க, இப்போது விபத்து நடந்துள்ள செய்தியும் வைரலாகியுள்ளது. தொடர்ச்சியாக ரஜினியை ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், இந்த விபத்து செய்தியையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்து கோர்த்து விட்டுள்ளார். அதேபோல், ரஜினி ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டர் பதிவில் அவருக்கு எதிராக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, இயக்குநர் நெல்சன், அனிருத் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். மேலும், பல சிறப்பு விருந்தினர்களுடன் செம்ம மாஸ்ஸாக நடைபெற உள்ளதாம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X