Jailer OTT Release: ஜெயிலர் OTT ரிலீஸ் தேதி... அதிரடியாக அறிவித்த அமேசான்... அடுத்த அலப்பறை லோடிங்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரையரங்குகளில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்த ஜெயிலர், ரஜினிக்கும் தரமான கம்பேக் கொடுத்துள்ளது.
தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் ப்ரைம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படம், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் தலைவர். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில் ஆகியோர் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தது, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக இரண்டே சீனில் நடித்த சிவராஜ்குமார், செம்ம மாஸ் காட்டியிருந்தார். முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவமாகவே அமைந்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் படத்தை தியேட்டரில் பார்க்காத ரசிகர்கள், ஓடிடி ரிலீஸுக்காக காத்திருந்தனர். படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், ஜெயிலர் இப்போதைக்கு ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தப் படம் வரும் 7ம் தேதி, அதாவது அடுத்த வாரம் வியாழக்கிழமை அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், ஓடிடி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜெயிலர் படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் செய்த ரசிகர்களுக்கு, ஓடிடி ரிலீஸ் தேதி பெரிய சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
முன்னதாக ஜெயிலர் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தாறுமாறாக கொண்டாடி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜெயிலர் வசூலில் குறிப்பிட்ட ஷேர், அதோடு 1.5 கோடி மதிப்புடைய BMW X7 காரை பரிசாக கொடுத்து அசத்தினார். அதேபோல், இயக்குநர் நெல்சனுக்கு செக் கொடுத்த கலாநிதி மாறன், அவருக்கு 1.5 கோடி மதிப்பிலான Porsche காரை பரிசாக கொடுத்துள்ளார். இந்த கொண்டாட்டங்களுடன் தற்போது ஜெயிலர் செப்டம்பர் 7ம் தேதி அமேசானில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications