Jailer Positives: நெல்சன் பண்ணதுலயே உருப்படியான விஷயம்.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பிளஸ்கள்!

சென்னை: பீஸ்ட் படத்தில் விஜய் போர்ஷனை எல்லாம் வெறித்தனமாக செய்திருந்தாலும் இயக்குநர் நெல்சன் கோட்டை விட்டது என்னவோ வில்லன் ஏரியாவில் தான். செல்வராகவனையே அந்த படத்தில் வில்லனாக போட்டிருந்தாலும் படம் தப்பித்திருக்கும் என்றே தெரிகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் வில்லன் ஏரியாவில் பெரிதாக தப்பு ஏதும் செய்யாமல் மிரட்டியிருப்பதும், ரஜினியின் மாஸுக்கு எந்த இடத்திலும் பங்கம் வராமலும் பார்த்துக் கொண்டது தான் ஜெயிலர் படத்தை தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட முழுக் காரணம் என்றே கூறலாம்.

Jailer Positives: Nelson done a brilliant Screenplay for Superstar Rajinikanth

அதே போல மோகன்லால், சிவராஜ்குமாரின் சீன் டைம் குறைவாக இருந்தாலும் அனிருத்தின் பிஜிஎத்துடன் அவர்களை காட்டிய விதம் தியேட்டரில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

சிங்கிள் சிங்கம்: 72 வயதிலும் தன்னை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்னொரு பாட்ஷா படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அமைதியாக இருப்பது மற்றும் ஒரு லெவலுக்கு மேல பேச்சே இல்லை வீச்சு தான் என வில்லன் ஆளின் தலையை துண்டாக வெட்டி எடுக்கும் இடத்திலேயே ஜெயிலர் படம் சூடு பறக்கிறது.

அதிலும் கண்ணாடியை ஸ்டைலாக ஒற்றைக் கையில் பிடித்துக் காட்டி ஸ்டைல் செய்வது, கிளைமேக்ஸில் சுருட்டை வாயிலேயே இடமாற்றி வில்லத்தன சிரிப்பை காட்டுவது என மிரட்டி எடுத்திருக்கிறார்.

Jailer Positives: Nelson done a brilliant Screenplay for Superstar Rajinikanth

வில்லன் விநாயகன்: ரஜினிக்கு அடுத்து இந்த படத்தை தாங்குவது வில்லன் விநாயகன் தான். மற்றவர்கள் அனைவருமே படத்தில் இருந்தாலும், கேமியோ கதாபாத்திரங்கள் போலவே வந்து செல்வதால் பெரியளவில் ஒட்டவில்லை.

கொடூரமாக ஆட்களை வித விதமாக கொல்வது, ரஜினியிடம் பம்முவது, பின்னர் பாய்வது, ரஜினியை வைத்தே தனது கனவை நினைவாக்கத் துடிப்பது அதிலும் அந்த க்ரீடத்துக்கு பக்கத்தில் நின்று கொண்டு அதை அணிந்துக் கொள்வது போன்ற காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பு. அவரது ஆட்களுடன் நடனமாடி வெறுப்பேற்றுவது என அலப்பறையை கிளப்பியிருக்கிறார்.

பவர்ஃபுல் பிளாஷ்பேக்: க்ளீன் ஷேவ் செய்துக் கொண்டு 15 வருட யங் ரஜினியாக டீ ஏஜிங் முறைப்படி இயக்குநர் நெல்சன் சூப்பர்ஸ்டாரை காட்டியிருக்கும் அந்த திகார் சிறை ஃபிளாஷ்பேக் காட்சி தான் வெறித்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் தங்கள் தலைவரை எப்படி பார்க்க ஆசைப்பட்டார்களோ அப்படியெல்லாம் காட்டி ஆக்‌ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

Jailer Positives: Nelson done a brilliant Screenplay for Superstar Rajinikanth

சிவராஜ்குமார், மோகன்லால்: கேமியோ ரோல்களில் மிரட்டலான டான்களாக வந்து செல்லும் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஸ்க்ரீன் ஸ்பேஸ் சும்மா பட்டாசாக தியேட்டரில் தெறிக்கிறது.

சிவராஜ்குமார் வீட்டில் அந்த ஃபேனில் ஜாஃபர் சாதிக்கை கட்டித் தொங்கவிடும் காட்சி மற்றும் மோகன்லால் இடத்தில் வில்லன் விநாயகத்துக்கு டார்கெட் வச்சிருக்கேன் முடிச்சிடுவா என்றும் கூட வந்திருக்கும் வில்லன் ஆட்களை போட்டுத் தள்ளிடவா எனக் கேட்கும் காட்சிகளும் தியேட்டரே அதிர்கிறது. கிளைமேக்ஸ் காட்சியே ஒரு தனி பிளஸ்ஸாக ரஜினி ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. பொதுமக்களும் தாராளமாக இந்த படத்தை பார்த்து ஒருமுறை என்ஜாய் பண்ணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X