Jailer: ஜெயிலர் சக்சஸ்... “தலைவருக்கு அப்புறம் அவங்க தான் காரணம்...” இயக்குநர் நெல்சன் ஓபன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 Jailer: Rajini and his fans are the reason for the success of Jailer

ஜெயிலர் சக்சஸ் - மனம் திறந்த நெல்சன்: சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக அமைந்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர், முதல் வாரம் மட்டும் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜெயிலர் படம் வெளியாகும் முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் ரிலீஸாகி மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது. விஜய் நடித்திருந்த இந்தப் படம் மேக்கிங், கதை, திரைக்கதை என அனைத்துவிதத்திலும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதனால் ஒருகட்டத்தில் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.

நெல்சனுக்குப் பதிலாக வேறொரு இயக்குநரை சூப்பர் ஸ்டார் டிக் செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினி தான் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து அவரை மாற்றவில்லை எனக் கூறியுள்ளார். இதனை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியே கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து இன்று ஜெயிலர் சக்சஸ் மீட் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இதில், இயக்குநர் நெல்சன், வசந்த் ரவி, ரெடிங் கிங்ஸ்லி, பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உட்பட ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். செய்தியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இதில் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் வெற்றி குறித்து மனம் திறந்துள்ளார். ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இறுதிவரை ரஜினி சார் தான் பெரிய சப்போர்ட்டாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

 Jailer: Rajini and his fans are the reason for the success of Jailer

மேலும், அவரது பவர் ஃபுல்லான ஆக்டிங் தான் ஜெயிலர் வெற்றிக்கு முதல் காரணம் என்றார். அதன்பிறகு அவரது ரசிகர்களால் தான் ஜெயிலர் இந்தளவுக்கு வெற்றிப் பெற்றுள்ளது என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். படத்தை பார்த்துவிட்டு தான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்துள்ளதாக சூப்பர் ஸ்டார் கூறினார். அதுவே எனக்கு முதல் நம்பிக்கையாக அமைந்ததாகவும் நெல்சன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பட்ஜெட் விசயத்தில் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் சன் பிக்சர்ஸ் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜெயிலர் கதை சொல்வதற்காக கலாநிதி மாறன் சாரை சந்திக்கச் சென்றேன். அவர் சீக்கிரம் கதை கேட்டுவிட்டு அனுப்பிவிடுவார் என நினைத்தால், 5 மணி நேரம் ஆனாலும் இடத்தை விட்ட நகரவில்லை என ஜாலியாக பேசியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X