Jailer: ஜெயிலர் ட்ரெய்லரில் மிஸ்ஸான மோகன்லால்... தலைவருடன் மாஸ் போஸ்டர்... இதுதான் ஹைப்!
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

ட்ரெய்லரில் அவருடைய காட்சிகள் வெளியாகாத நிலையில், தற்போது செம்ம மாஸ்ஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் - லால்லேட்டன் சர்ப்ரைஸ் போஸ்டர்: அண்ணாத்த படத்திற்குப் பின்னர் ரஜினியின் நடிப்பில் வெளியாகவுள்ளது ஜெயிலர். பேட்ட, தர்பார், அண்ணாத்த என வரிசையாக பெரிய ஹிட் கொடுக்காத ரஜினிக்கு, ஜெயிலர் தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ், ப்ரொமோஷனில் பட்டையை கிளப்பி வருகிறது.
பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்திய சன் பிக்சர்ஸ், மூன்று தினங்களுக்கு முன்னர் ட்ரெய்லரையும் ரிலீஸ் செய்திருந்தது. அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தில் இருந்து அடுத்தடுத்து சில எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் செம்ம மாஸ்ஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயிலரை கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்பதால், மல்டி ஸ்டார்ஸ் படமாக ப்ரொமோட் செய்துள்ளார் நெல்சன். அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் டாப் ஸ்டார் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரையும் ரஜினியுடன் நடிக்க வைத்துள்ளார். இவர்களில் மோகன்லாலின் கேரக்டர் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா என கோலிவுட்டில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள மோகன்லால், தற்போது சூப்பர் ஸ்டாருடனும் கை கோர்த்துள்ளார். அதனால் அவரது கேரக்டர் ரியலான சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நேற்று மலையாள சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த மோகன்லால், ஜெயிலர் படத்தில் மேத்யூ என்ற ரோலில் நடித்துள்ளதாகவும், இது கேமியோ கேரக்டர் என்றாலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வாரம் வெளியான ஜெயிலர் ட்ரெய்லரில் மோகன்லாலின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. முன்னதாக ஜெயிலர் ரிலீஸ் தேதி டீசரில் மட்டும் அவரது சீன் இருந்தது. அதனால், ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்கும் விதமாக தற்போது மோகன்லாலின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினி - மோகன்லால் என இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே ஷோபாவில் அமர்ந்திருக்கும் இந்தப் போஸ்டர் வெறித்தனமாக உள்ளது. யாரெல்லாம் இந்த காம்போ பார்க்க ரெடியா இருக்கீங்க என்ற கேப்ஷனுடன் வெளியான மோகன்லால் போஸ்டர் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











