Jailer: தமன்னாவுக்காக ஜெயிலர் படம் பார்க்கலாம்... என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது.
அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார்.
தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் செம்ம ஸ்டைலாக டான்ஸ் ஆடியது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாருக்காக இல்லையென்றாலும் தமன்னாவுக்காக ஜெயிலர் படத்தை திரையரங்கில் பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமன்னாவுக்காக ஜெயிலர் படம் பார்க்கலாம்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.
அனிருத் இசையில் 'காவாலா' என்ற இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ்வின் ஹஸ்க்கியான குரலும் தமன்னாவின் கிளாமர் ஆட்டமும் ரசிகர்களுக்கு செம்ம போதையை கொடுத்துள்ளது. சமீபத்தில் ஜீ கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகம் என செம்ம ஹாட்டாக நடித்து ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்திருந்தார் தமன்னா. அதே வைபில் ஜெயிலர் முதல் பாடலிலும் தனது ரசிகர்களை குலுங்க வைத்துள்ளார்.
அதேநேரம் இப்பாடலில் தமன்னாவுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட்டம் போட்டு மாஸ் காட்டியுள்ளார். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தனது ட்ரேட் மார்க் ஸ்டைலான கூலிங் கிளாஸை சுழற்றி மாட்டுவதை பார்க்க செம்ம மாஸ்ஸாக இருக்கிறது. இருந்தாலும் காவாலா பாடலால் தமன்னா தான் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறார். தமன்னாவின் ஆட்டத்தை ரசிகர்கள் பலரும் சிலாகித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமன்னாவின் ஆட்டத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் விதவிதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதில், சூப்பர் ஸ்டாரின் படங்கள் முன்புபோல சூப்பர் ஹிட் ஆகுவது இல்லை என்பதால், தியேட்டர் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூல் இல்லை. ஆனால், ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கலாம் எனவும், அப்படி நடந்தால் அதற்கு தமன்னா தான் காரணமாக இருப்பார் எனக் கூறி வருகின்றனர்.

காவாலா பாடலில் தமன்னாவின் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், அவரை ரசிப்பதற்காகவே ஜெயிலர் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பார்கள் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், ஜெயிலர் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது. ரஜினியும் நெல்சனும் சேர்ந்து ஜெயிலர் படத்தை எப்படி கொடுத்தாலும் பரவாயில்லை, தங்களுக்கு தமன்னா மட்டுமே போதும் எனக் கூறி வருகின்றனர்.
ஆகமொத்தம் தற்போது ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமாக இல்லாமல், தமன்னாவின் மூவியாக மாறிவிட்டது. அதேநேரம் இந்த காவாலா பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜெயிலர் ட்ரெய்லர் இருக்கும் எனவும், அதில் சூப்பர் ஸ்டாரின் ரியலான சம்பவத்தைப் பார்க்கலாம் என்றும் அவரது ரசிகர்கள் சவால் விட்டுள்ளனர். ஆனாலும், ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தப்பிவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











