Jailer: நானும் ரெடி தான்... விஜய் பிறந்தநாளில் ஜெயிலர் அப்டேட்... லியோவை கார்னர் செய்த ரஜினி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
தலைவரின் கம்பேக் படமாக ஜெயிலர் இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பில் மினி டீசரை வெளியிட்டது படக்குழு.
அதனைத் தொடர்ந்து விரைவில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவ ராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது படக்குழு. மினி டீசருடன் வெளியான இந்த ரிலீஸ் தேதி அப்டேட், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ரஜினியி லுக், ஸ்டைல் எல்லாமே அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இதனால், தலைவரின் கம்பேக் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஜூன் இறுதிக்குள் ஜெயிலர் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதலில் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டதாம். இதற்கு விஜய் தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. வரும் 22ம் தேதி விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு லியோ கிளிம்ப்ஸ் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலில் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் என அப்டேட் கொடுத்தது படக்குழு.
அதன்படி, ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. முக்கியமாக லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட், மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகும் முன்பு வெளியானது. இதனால், மாமன்னன் ட்ரெய்லரை விடவும், லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய டாக் அதிகமானது. தற்போது அதேபோல் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகவுள்ளதாம்.
லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியாகும் ஜூன் 22ம் தேதி ஜெயிலர் முதல் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிடவுள்ளதாம். இதனால் ஒரே நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கும் என்பதுடன், விஜய்யின் சூப்பர் ஸ்டார் கனவுக்கு செக் வைக்கவும் ரஜினி முடிவு செய்துள்ளாராம். அதேபோல், இம்மாதம் இறுதியில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications