Jailer: ஜெயிலரில் அலெக்ஸ் பாண்டியன் லுக்..? என்ன தலைவரே இப்படியெல்லாம் சம்பவம் பண்றீங்க..?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜெயிலர் வெளியாகும் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயிலரில் 'மூன்று முகம்' பட அலெக்ஸ் பாண்டியன் லுக்கில் மிரட்டும் ரஜினியின் போஸ்டர் வைரலாகி வருகிறது.
ஜெயிலரில் அலெக்ஸ் பாண்டியன் லுக்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ரிலீஸாக உள்ளதால், ரசிகர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டுள்ளனர். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ரஜினிக்கு வெறித்தனமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, கோலிவுட் உட்பட ஒட்டுமொத்த திரையுலகிலும் ஜெயிலர் செம்ம ஹைப் கொடுத்துள்ளது.
உலகம் முழுவதும் ஜெயிலர் படத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. முதல் நாள் மட்டுமின்றி வரும் 15ம் தேதி வரை ஜெயிலர் டிக்கெட்டுகள் முழுவதுமாக புக்கிங் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸிலும் மிகப் பெரிய ஓபனிங் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஜெயிலர் ஃபீவராக காணப்படுகிறது.
ரசிகர்கள் பலரும் ரஜினியின் வீடியோக்கள், அவரது பஞ்ச் டயலாக், செம்ம மாஸ்ஸான போஸ்டர் ஆகியவைகளை வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் போஸ்டர் ஒன்றில் வெளியான ரஜினியின் மிரட்டலான லுக் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. ரஜினி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முகம். ரஜினி மூன்று கெட்டப்புகளில் நடித்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
முக்கியமாக இந்தப் படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர், ரஜினியின் கேரியரில் கோல்டன் ஐக்கானாக அமைந்தது. அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் ரஜினியின் நடிப்பும், பஞ்ச் வசனங்களும் ரசிகர்களை தெறிக்கவிட்டன. தற்போது அதே அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் லுக்கில் ஜெயிலர் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.
ஆனால், இது ரஜினி ரசிகர்களால் உருவாக்கிய ஃபேன்மேட் போஸ்டர் தான் என்றும், ஜெயிலரில் இப்படியொரு கெட்டப் கிடையாது எனவும் சொல்லப்படுகிறது. ஜெயிலரில் ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் தான் ரஜினி நடித்துள்ளார். அதனால், ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கேரக்டர், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











