Jailer: அட்வான்ஸ் புக்கிங்கில் கோடிகளை குவித்த ஜெயிலர்... உலகம் முழுவதும் அதிரடி வசூல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இந்த வாரம் 10ம் தேதி வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை பார்க்க ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் அட்வான்ஸ் புக்கிங் வேகமெடுத்துள்ளது.

 Jailer: Rajinikanths Jailer pre-booking is reported to collect up to 10 crores

சென்னை, தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் ப்ரீ-புக்கிங் மூலம் பல கோடிகளை வசூலித்துள்ளது ஜெயிலர்.

ப்ரீ-புக்கிங்கில் மாஸ் காட்டும் ஜெயிலர் : பேட்ட, தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்விப் படங்களால் துவண்டுபோன சூப்பர் ஸ்டாருக்கு, கடைசி நம்பிக்கையாக ஜெயிலர் ரிலீஸாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரிட்டையர்டு ஜெயிலராக நடித்துள்ளாராம் ரஜினி. அவரது மகனாக நடித்துள்ள வசந்த் ரவியை வில்லன்கள் கடத்திவிட, அவரை ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஜெயிலர் படத்தின் கதையாம். இதனை ஆக்‌ஷன், டார்க் காமெடி பின்னணியில் ரஜினிக்கான ஃபேன்பாய் சம்பவமாக இயக்கியுள்ளாராம் நெல்சன். அதனால், ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதுவும் ஜெயிலர் படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஜெயிலர் படத்துக்காக ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதவிர மற்ற ஆன்லைன் ஆப்கள் மூலமும் பல ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.

 Jailer: Rajinikanths Jailer pre-booking is reported to collect up to 10 crores

முக்கியமாக அமெரிக்காவில் மட்டுமே 5 லட்சம் டாலர்கள் வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முதல் மூன்று வாரங்களுக்கு டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அமெரிக்கா தவிர மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகளிலும் ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளதாம். சில பகுதிகளில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட் புக்கிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதன்மூலம் ஜெயிலர் படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை ப்ரீ-புக்கிங் வசூல் கிடைத்துள்ளதாம். படம் வெளியாகும் முன்பே பாக்ஸ் ஆபிஸில் 10 கோடி வரை வசூலித்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், இனிவரும் நாட்களிலும் ஜெயிலர் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X