Jailer: ஜெயிலர் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட்... ரஜினி ரசிகர்களை கூல் செய்த நெல்சன்!
சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகிறது. அண்ணாத்த படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய சூப்பர் ஸ்டார், அதற்கும் சேர்த்து ஜெயிலரில் சம்பவம் செய்திருப்பார் என எதிர்பார்த்துள்ளனர்.
இந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டு மாஸ் காட்டினார் நெல்சன். அனிருத் இசையில் வெளியான இந்த இரண்டு பாடல்களும் தலைவரின் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி வரும் 28ம் தேதி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, இயக்குநர் நெல்சன், அனிருத் உள்ளிட்ட ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜெயிலர் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது.
அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருப்பதால் U/A சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து விரைவில் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 50 முதல் 70 கோடி வரை வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இப்படத்தின் ப்ரொமோஷன் வேலைகளும் அதிகளவில் செய்யப்படுவதால், முதல் வாரம் ஓபனிங் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











