Jailer: சிறப்பான சம்பவம்... 3நிமிஷம் கூட பார்க்க முடியல... ஜெயிலர் ட்ரெய்லர் ரசிகர்கள் ரியாக்ஷன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
இதனை முன்னிட்டு கடந்த வாரம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தற்போது ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆக்ஷன் பேக்கேஜ்ஜாக உருவாகியுள்ள ஜெயிலர் ட்ரெய்லர் குறித்து ரசிகர்களின் ரியாக்ஷன்ஸ் என்னவென்பதை தற்போது பார்க்கலாம்.

ஜெயிலர் ட்ரெய்லர் ரசிகர்கள் ரியாக்ஷன்ஸ்: அண்ணாத்த படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் வரும் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ரஜினிக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என இதுவரை மொத்தமே 3 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள நெல்சனுக்கும் ஜெயிலர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்து கடந்தாண்டு வெளியான பீஸ்ட், மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதனால், ஜெயிலரில் வெறித்தனமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடிக்க, அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தின் பாடல்கள் கடந்த வாரம் வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. 2.15 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் ஆரம்பம் முதலே ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ளது. ரிட்டையர்டு லைஃப், அழகான குடும்பம் என வாழ்ந்துவரும் ரஜினி, திடீரென வில்லன்களை புலியாக பாய்ந்து வெளுத்து வாங்குகிறார். ரஜினியின் அக்மார்க் ஆக்ஷன் காட்சிகள் ஜெயிலரிலும் இடம்பெற்றுள்ளது என்பதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.
அதேபோல், "ஒரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்," "ரொம்ப தூரம் போய்ட்டேன் ஃபுல்லா முடிச்சிட்டு தான் திரும்பி வர முடியும்" என பஞ்ச் டயலாக் பேசி வைப் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "சிறப்பான தரமான சம்பவம்... சில பட்டங்களை யாராலும் எடுக்க முடியாது, அது சாதாரண மக்களால் மட்டுமே கொடுக்க முடியும் தலைவர் நிரந்தரம்" என கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், கூஸ்பம்ப் ட்ரெய்லர், தலைவர் வெறித்தனமா கம்பேக் கொடுக்கப் போகிறார் எனவும் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் சிலரோ இது நெல்சனுக்கும் சிறப்பான கம்பேக் படமாக அமையும் எனவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஜெயிலர் ட்ரெய்லரை நெட்டிசன்கள் பலரும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். "3 நிமிட ட்ரெய்லரே காட்டு மொக்கை.. இந்தப் படத்தை மூன்று மணி நேரம் எப்படி பார்க்க முடியும்... அதே அரத பழைய கதையை ரஜினி ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள்"என ட்ரோல் செய்துள்ளனர்.
அதேபோல், ஜெயிலர் ட்ரெய்லரை பார்க்கும் போது தர்பார், டாக்டர், பேட்ட, பீஸ்ட், விக்ரம் படங்களின் சாயல் இருப்பதாகவும், இதுவும் ரஜினிக்கு தோல்விதான் என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சிலரோ ஜெயிலர் ட்ரெய்லரை பவர் பாண்டி படத்துடன் கம்பேர் செய்தும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஜெயிலர் ட்ரெய்லருக்கு ரஜினி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











