Jailer: “இது டைகர் கட்டளை”... மதுரையில் அலப்பறையை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்... ஜெயிலர் சம்பவம் லோடிங்
மதுரை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 28) நடைபெறுகிறது.
இதனிடையே நேற்று இப்படத்தில் மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இப்போதே ஜெயிலர் படத்தை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
அதன்படி, ஜெயிலர் படத்துக்காக மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் அலப்பறையை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தை கொண்டாட ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்திருந்தது. அவைகளில் 'ஹ்ம்க்கும்', 'ஜுஜுபி' பாடல்கள் ரஜினியின் பஞ்ச் வசனங்களுடன் மாஸ் காட்டுகின்றன.
ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே 'அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..?', 'ரஜினியின் மார்க்கெட் அவ்வளவு தான்' என்பதாக ஏராளமான ட்ரோல்கள் வைரலாகின. அதற்கெல்லாம் சேர்த்து தலைவர் ஜெயிலர் படத்தில் வட்டியும் முதலுமாக கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
முக்கியமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ஜெயிலர் பாடல்களில் பதிலடி கொடுத்துள்ள தலைவர், படத்திலும் ரியல் சம்பவம் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அதேபோல், தலைவருக்கு சப்போர்ட்டாக அவரது ரசிகர்களும் களத்தில் இறங்கிவிட்டனர். வழக்கமாக ரஜினியின் பஞ்ச் வசனங்களை வைத்து போஸ்டர் அடித்து மாஸ் காட்டுவார்கள் ரசிகர்கள்.
ஆனால், இந்தமுறை ஜெயிலர் படத்தின் பாடல்களில் இருந்தே அலப்பறையை தொடங்கியுள்ளனர். மதுரையில் ஜெயிலர் படத்துக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "இது டைகரின் கட்டளை... உன் சாதனையை இங்கு எவரும் எட்டவில்லை" என ஸ்மார்ட்டாக பஞ்ச் வைத்துள்ளனர். இது விஜய்யை அட்டாக் செய்வதை போல இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், இன்னும் பல பஞ்ச் வசனங்களுடன் ஜெயிலர் படத்தை கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரஜினியின் ரசிகர்கள்.
இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது, பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, இயக்குநர் நெல்சன், அனிருத் உள்ளிட்ட ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுடன் இன்னும் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











