Jailer: “சிட்டி கேட்வாக்... ரெட்ரோ லுக்..” ஜெயிலர் ப்ளாஷ்பேக்கில் மஜா செய்த ரஜினி!

சென்னை: இன்று வெளியான ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

முக்கியமாக ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர், பிளாஷ்பேக் லுக் ஆகியவை ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ரஜினியின் பிளாஷ்பேக் லுக்கை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 Jailer: Rajinis flashback look in Jailer is trending among fans

ஜெயிலர் ப்ளாஷ்பேக்கில் மஜா செய்த ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு FDFS எனப்படும் அதிகாலை ஷோ திரையிடப்படவில்லை. காலை 9 மணி காட்சி என்றாலும் நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தனர்.

அதுமட்டும் இல்லாமல் அதிகாலை முதலே அலப்பறையை தொடங்கிய ரசிகர்கள், ரஜினியின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்தும், அதன் முன்பு ஆட்டம் போட்டும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ள ஜெயிலர் படத்துக்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆனாலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரம் ஜெயிலர் படத்தில் ரஜினியில் ப்ளாஷ்பேக் காட்சிகள் செம்மையாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதியில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வரும் ரஜினி, ப்ளாஷ்பேக்கில் இன்னும் செம்ம மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இளமையான தோற்றத்தில் ரெட்ரோ லுக்கில் ஸ்லிம்மாக வரும் ரஜினி, 2.O படத்தில் வரும் சிட்டி போல ஸ்டைலாக நடந்து வருகிறார். இந்த வீடியோவை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

 Jailer: Rajinis flashback look in Jailer is trending among fans

ரஜினியை இப்படி ஸ்டைலான லுக்கில் மாற்றிய நெல்சனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதுவரை ஜெயிலர் பட போஸ்டர், ட்ரெய்லர் எதிலும் வராத இந்த லுக், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. மேலும், இரண்டாவது பாதியில் ரஜினியின் சம்பவம் இன்னும் தரமாக உள்ளதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் ஜெயிலர் படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக ரஜினி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான மூன்று முகம் படத்தின் அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர் நேற்று வைரலானது. அந்த போஸ்டரில் இருப்பது போன்றே ரஜினியின் ஜெயிலர் லுக்கும் மாஸ் காட்டி வருகிறது. ஜெயிலர் ப்ளாஷ்பேக் காட்சியில், ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கேரக்டர், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனின் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X