Jailer: இத்தனை நாடுகளிலும் ஜெயிலர் தான் நம்பர் 1... வேர்ல்ட்வைட் பாக்ஸ் ஆபிஸில் தலைவர் அலப்பறை!
சென்னை: ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது.
உலகம் முழுவதும் ரிலீஸான ஜெயிலர் படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து 4 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டி வரும் ஜெயிலர் இதுவரை 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், உலகளவிலும் வசூலில் சக்கைப்போடு போடும் ஜெயிலர், பல நாடுகளில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.

வெளிநாடுகளில் நம்பர் 1 இடம் பிடித்த ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததோ, அந்தளவிற்கு கமர்சியலாக உருவாகி வரவேற்பையும் பெற்றுள்ளது. கதை, திரைக்கதை குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் இருப்பினும், மேக்கிங், ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்டைல், லுக், ஆக்ஷன் என ரசிகர்களுக்கான என்டர்டெய்னராக மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. ரசிகர்கள் பலரும் ஜெயிலர் படத்தில் ரஜினி ஒன்மேன் ஆர்மியாக சம்பவம் செய்துள்ளதாக புகழ்ந்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் இல்லாமல் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் செம்ம மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர்.
அதேபோல், காமெடியில் யோகி பாபுவும், விநாயகனின் வில்லன் கேரக்டரும் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. கடத்தல், டார்க் காமெடி என தனக்கு ஏற்ற கதைக்களத்தில் பயணித்துள்ள நெல்சன், சூப்பர் ஸ்டாருக்கு தகுந்த நல்ல ஸ்க்ரிப்ட்டை இயக்கியிருக்கலாம் என்ற நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும், பாக்ஸ் ஆபிஸில் சிங்கிளாக நின்று சம்பவம் செய்து வருகிறது ஜெயிலர்.
இந்தியளவில் இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் தான் நம்பர் 1 என பிரபல சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் வெளிநாடுகளிலும் ஜெயிலர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். டிக்கெட் புக்கிங் மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஜெயிலருக்கு நம்பர் 1 பொசிஷன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அரபு நாடுகளில் ஜெயிலர் தான் நம்பர் 1 இடம் பிடித்துள்ளதாம்.
அமெரிக்காவில் இதுவரை 4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது ஜெயிலர். அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மலேசியாவில் இதுவரை 3 மில்லியன் டாலர் கலெக்ஷன் செய்துள்ளதாகவும் அந்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் படி மலேசியாவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது. கனடாவில் இதுவரை 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம்.
அதேபோல், ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் தலா 2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாகவும், துபாய் உட்பட வளைகுடா நாடுகளில் 4 நாள் வசூல் 3 மில்லியன் டாலர்கள் எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறி வருகின்றன. முதல் வாரம் முடிவில் ஜெயிலர் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது ரஜினி, இயக்குநர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











