Jailer: இது தலைவரோட ஆர்டர்... ஜெயிலர் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் டார்க்கெட் இத்தனை கோடியா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அண்ணாத்த படத்தில் விட்டதை விரட்டிப் பிடிக்க வேண்டும் என வெறித்தனமாக காத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜெயிலர் முதல் நாள் வசூல்: ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்கள், நெட்டிசன்களின் ட்ரோல்களால் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால், கலெக்ஷனிலும் பெரிதாக எடுபடவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்ணாத்த தோல்வியில் இருந்து மீண்டு வர காத்திருந்த சூப்பர் ஸ்டார், அடுத்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர், தலைவருக்கு தரமான கம்பேக் கொடுக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஆகஸ்ட் 10ம் தேதி சிங்கிளாக களமிறங்குகிறது ஜெயிலர் திரைப்படம்.
ஜெயிலர் ரிலீஸ் தேதி அறிவித்ததும், ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவிருந்த மாவீரன் பட வெளியீட்டை ஜூலை 14ம் தேதிக்கு மாற்றினார் சிவகார்த்திகேயன். ஜெயிலர் தனியாக மாஸ் காட்ட வேண்டும் என்ற ரசிகர்களின் கனவு தற்போது நனவாகவுள்ளது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் படம் சம்பவம் செய்யும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதன்படி, ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்டமான ப்ரோமோஷன் செய்யவிருப்பதால், உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் இருக்கும் என சொல்லப்படுகிறது. வரும் 28ம் தேதி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதோடு படத்தின் ட்ரெய்லரும் வெளியாக உள்ளதாம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், பல சர்ப்ரைஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில், ஜெயிலர் திரைப்படம் 70 கோடி வரை வசூலிக்கும் என தலைவரே நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம். அதற்காக படக்குழுவுக்கு சில ஸ்பெஷல் டிப்ஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் கனவு பலிக்குமா என்பது ஆகஸ்ட் 10ம் தேதி தெரியவரும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications