Jailer: ஜெயிலர் முதல் பாதி பாட்ஷா மாதிரி... ஆனா இரண்டாவது பாதி லிங்கா 2... அப்போ சோலி முடிஞ்சுதா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிக்கு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதாகவும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அதேநேரம் ஜெயிலருடன் ரஜினியின் பாட்ஷா, லிங்கா படங்களை கம்பேர் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Jailer: Rajinis Jailer film is similar to Baashha..?

ஜெயிலர்... பாட்ஷா... லிங்கா...: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டணியே இதில் நடித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அதிக ஹைப் கொடுத்த ஜெயிலர் இன்று வெளியானதால், இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ரஜினியின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், மக்கள், நெட்டிசன்கள் என பலரும் விதவிதமாக கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். சோஷியல் மீடியாக்கள் முழுவதும் ஜெயிலர் விமர்சனங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாதி குறித்து பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்வீட் செய்திருந்தார். அதில் ஜெயிலர் ஃபர்ஸ்ட் ஹாஃப் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் போல இருப்பதாக கூறியிருந்தார். ரஜினியின் கேரியரில் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது பாட்ஷா தான். ரியல் கேங்ஸ்டர் ஜானரில் தரமான ஃபேன்பாய் சம்பவமாக பாட்ஷா உருவானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 Jailer: Rajinis Jailer film is similar to Baashha..?

பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பே இல்லை என ரஜினியும் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறிவிட்டனர். ஆனால், ஜெயிலர் முதல் பாதி பாட்ஷா செகண்ட் பார்ட் என கூறியதற்கு நெட்டிசன் ஒருவர் பங்கமாக கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார். ஜெயிலர் முதல் பாதி பாட்ஷா மாதிரி இருந்தாலும், இரண்டாம் பாதி லிங்கா செகண்ட் பார்ட் போல இருக்கிறது என ட்ரோல் செய்துள்ளார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா திரைப்படம் ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட ரஜினி படமாகவும் லிங்கா அமைந்தது. ஜெயிலர் படத்திற்கும் முதல் பாதி சூப்பர் என்றும், இரண்டாம் பாதி அவ்வளவு ரசிக்கும்படி இல்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனை மனதில் வைத்தே ஜெயிலர் படத்தை லிங்காவுடன் கம்பேர் செய்து ட்ரோல் செய்தது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X