Jailer: 'விக்ரம் படத்தோட காப்பி தான் ஜெயிலர்..’ நெல்சனை விளாசிய அமெரிக்க ரசிகை... சோலி முடிஞ்சுது!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் காப்பி என ஜெயிலரை விளாசியுள்ளார் அமெரிக்க ரசிகை ஒருவர்.
விக்ரம் படத்தோட காப்பி தான் ஜெயிலர்: ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது. கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸான இந்தப் படம் தொடர்ந்து 6 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. தமிழ்நாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்துள்ளது. இதனால், இந்தப் படத்தை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னொருபக்கம் இந்தப் படம் குறித்த நெகட்டிவான விமர்சனங்கள், ட்ரோல்களும் அதிகமாக வெளியாகி வருகின்றன. ரஜினியின் ஸ்டைல், லுக் தவிர பெரிதாக எதுவும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேபோல், இயக்குநர் நெல்சன் மேக்கிங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதாகவும், கதை, திரைக்கதையெல்லாம் சுத்தமாக எடுபடவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக ஜெயிலர் படத்தை ட்ரோல் செய்து வருகிறார். இதுவரை அவரது விமர்சனங்களை முன்வைத்து வந்த ப்ளூ சட்டை, தற்போது ரசிகர்களின் வீடியோவை வெளியிட்டு ஜெயிலரை பங்கம் செய்து வருகிறார்.
ஜெயிலர் வெளியானது முதல் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ரொம்பவே ஹைப் கொடுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவில் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என ஒரேயொரு வீடியோ வெளியிட்டு மொத்தமாக சம்பவம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு திரையரங்கில் ஜெயிலர் பார்த்துவிட்டு வெளியே செல்லும் ரசிகர்களிடம் படம் குறித்து கருத்துக் கேட்கப்படுகிறது.
அப்போது வரும் ரசிகை ஒருவர், "ஜெயிலர் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதி போரிங்" என கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகையோ "ஜெயிலர் அப்படியே கமலின் விக்ரம் பாத்தின் காப்பி" என கலாய்த்துவிட்டுச் செல்கிறார். அதேபோல், அனிருத்தின் பின்னணி இசையும் அப்படியே விக்ரம் படத்தின் காப்பி என அவர் ட்ரோல் செய்துள்ளார்.
இந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: நாம சொன்னா வன்மம், வத்தக்கொழம்புன்னு வடை வாயனுங்க குதிப்பானுங்க. இந்தாங்கடா.. வெளிநாட்ல இருக்கற நம்நாட்டு பெண்கள்.. உங்களுக்கு அன்பளிப்பு தந்துருக்காங்க. கேட்ச் பண்ணிக்கங்க. அங்க Doughnut வடை மிஷின் எத்தன மில்லியன் டாலர்ல போய் நிக்கப்போகுதோ!!" என பதிவிட்டுள்ளார்.
இந்த டிவிட்டர் பதிவில் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல வந்து ப்ளூ சட்டை மாறனை கும்மியடித்துக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் படத்தில் மகனுக்காக வில்லன்களை வேட்டையாடுவார் கமல். ஜெயிலர் படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதேமாதிரி தான் என முதல் நாளில் இருந்தே விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











