Jailer: நெல்சனால் வந்த வாழ்வு... ஜெயிலரில் ரெடின் கிங்ஸ்லி சம்பளம்... இது லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி.
தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படத்திலும் காமெடியில் கலக்கியுள்ளார் ரெடின்.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலருக்காக ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு முதல் வாரத்தில் நல்ல ஓபனிங் கிடைத்தது. ரஜினியின் ஆக்ஷன், நெல்சனின் டார்க் காமெடி என பக்கா கமர்சியல் படமாக வரவேற்பைப் பெற்றுள்ளது ஜெயிலர். இதில், யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் காமெடி கேரக்டரில் நடித்திருந்தனர்.

இவர்களில் நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி, தொடர்ந்து காமெடியனாக கலக்கி வருகிறார். எல்கேஜி, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, டிடி ரிட்டர்ன்ஸ் என பல படங்களில் நடித்துவிட்டார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் தான் ரெடின் கிங்ஸ்லிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கோலமாவு கோகிலா முதல் ஜெயிலர் வரை நெல்சனின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டார் ரெடின் கிங்ஸ்லி. ஜெயிலர் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் கேரக்டரில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி, இரண்டாம் பாதியில் தான் என்ட்ரி ஆகிறார். அதன்பின்னர் ரஜினி, தமன்னா, சுனில் ரெட்டி ஆகியோருடன் அவர் அடிக்கும் காமெடி லூட்டிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லிக்கு 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களில் நடித்த போது ரெடின் கிங்ஸ்லி வாங்கிய சம்பளத்தை விடவும், இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சனுக்குப் பிறகு அவரது டீமில் அதிகம் சம்பாதிப்பது ரெடின் கிங்ஸ்லி தான் என சொல்லப்படுகிறது. வித்தியாசமான பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வரும் ரெடின் கிங்ஸ்லி, இனிவரும் நாட்களில் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











