Jailer Release Date: விஜய்க்கு செக் வைத்த ரஜினி... ஜெயிலர் ரிலீஸ் தேதியால் லியோ டீம் அப்செட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் படத்தை அதிகம் நம்பியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது எந்தப் படங்களும் சரியாக ஓடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தற்போது ஜெயிலர் படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Jailer Release Date: Rajinikanth’s Jailer is Planning To Release In Theatres On SEP 14

ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதி:அண்ணாத்த தோல்வியால் துவண்டு இருந்த ரஜினி, தற்போது ஜெயிலர் படத்தில் தீயாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ரஜினியுடன் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஜெயிலர் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாம். சென்னை, கடலூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை என பல இடங்களில் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் ஜெயிலர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

ஏற்கனவே ரஜினியின் கேரக்டர், தீம் மியூசிக் ஆகியவை ஜெயிலர் படத்தில் இருந்து வெளியாகிவிட்டன. அதன்படி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் படம் முதலில் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என தான் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்பின்னர் ஜூன் மாதம் வெளியாகும் எனவும், இல்லையென்றால் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், தற்போதைய லேட்டஸ்ட் தகவல்படி, ஜெயிலர் படத்தை செப்டம்பர் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது சன் பிக்சர்ஸ்.

 Jailer Release Date: Rajinikanth’s Jailer is Planning To Release In Theatres On SEP 14

ஜெயிலர் படத்தை விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியிட்டால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறது. ஜெயிலர் ரிலீஸ் தேதிக்கும், லியோ ரிலீஸ் தேதிக்கும் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், விஜய்யின் லியோ படத்துக்கு முன்பே ஜெயிலரை களமிறக்க துணிந்துவிட்டது சன் பிக்சர்ஸ். ரசிகர்களிடம் நல்ல ஓபனிங் கிடைத்துவிட்டால் லியோ ரிலீஸாகும் வரை ஜெயிலர் தான் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X