Jailer Review: ஜெயிலர் முதல் விமர்சனம்... அனிருத்தை பேப்பர் ரோஸ்ட் போட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில், ஜெயிலர் படம் எப்படி வந்துள்ளது என இசையமைப்பாளர் அனிருத் முதல் விமர்சனம் கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், அனிருத்தை பேப்பர் ரோஸ்ட் காமெடியால் பங்கம் செய்துள்ளார்.
அனிருத்தை பேப்பர் ரோஸ்ட் போட்ட ப்ளூ சட்டை: சினிமா ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் என பிரம்மாண்டக் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர், வரும் 10ம் தேதி வெளியாகிறது. முன்னதாக கடந்த மாதம் இறுதியில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற, இரு தினங்களுக்கு முன்னர் ட்ரெய்லரும் ரிலீஸானது.

ரஜினியின் மஜாவான ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியான ஜெயிலர் ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரஜினியின் பிளாஷ்பேக் போர்ஷன் செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் டைகர் முத்துவேல் பாண்டியன் கேரக்டர் தான் இப்போதைக்கு ரசிகர்களின் வைபாக உள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனத்தை அனிருத் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துவிட்ட அனிருத், ஜெயிலர் ஃபைனல் வெர்ஷனை பார்த்துள்ளார். பின்னர் அதிகுறித்து டிவீட் செய்துள்ள அனிருத், ஜெயிலர் என கேப்ஷன் கொடுத்து ஃபயர், சாம்பியன் கோப்பை, கிளாப் ஆகிய எமோஜிகளை பதிவிட்டுள்ளார். அதாவது ரஜினியின் ஜெயிலர் செம்ம மாஸ் என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்தின் இந்த டிவிட்டர் பதிவு ரஜினி ரசிகர்களிடம் செம்ம வைரலாகி வருகிறது. ஆனால், அனிருத்தின் ட்விட்டர் பதிவை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்து ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார். 'ஜெயிலர்.. ஃபர்ஸ்ட் ரிவியூ வந்துருச்சி ஜி. செம மாஸாம். பக்கா என்டர்டைனராம்'... 'யார் சொன்னது?' 'அனிருத்' - என பதிவிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த டிவீட்டில் கவுண்டமணி, சத்யராஜ்ஜின் காமெடி வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
சத்யராஜ், கவுண்டமணி நடித்த 'பேப்பர் ரோஸ்ட்' காமெடி ரொம்பவே பிரபலமானது. அதாவது, ஹோட்டலில் சாப்பிட செல்லும் கவுண்டமணி 'இந்த ஹோட்டலில் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டது இல்லையே, நாக்குல வச்சா அப்படியே கறைஞ்சு போய்டும். லிவர்க்கும் நல்லது" என சத்யராஜ்ஜிடம் கூறுவார். அதற்கு சத்யராஜ் கவுண்டமணியை பங்கமாக கலாய்ப்பதாக இந்த காமெடி இருக்கும். இதில் சத்யராஜ்ஜை மக்கள் எனவும், கவுண்டமணியை அனிருத் எனவும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் சும்மாவே இருக்க மாட்டாரா. படம் ரிலீஸாகும் முன்பே இப்படியென்றால், அடுத்த வாரம் பெரிய கலவரமே வெடிக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











