‘ஜெயிலர்‘ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு...மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற அளவுக்கு 47 ஆண்டுகளாக திரையுலகில் மூடிசூடா மன்னாக இருக்கிறார் ரஜினிகாந்த்.
தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரஜினிகாந்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு

அண்ணாத்த
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானத் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,குஷ்பு, மீனா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், வசூலை வாரிக்குவித்தது.

நெல்சனுடன் கைகோர்த்தார்
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து பல இயக்குநர்களுடன் பேசிய ரஜினிகாந்த், கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றிப்படங்களை கொடுத்த நெல்சனுடன் கைகோர்த்தார். இந்த நேரத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தால், ரஜினிகாந்த் நெல்சன் படத்தில் நடிக்கமாட்டார் என்ற பேச்சுக்கள் எழுந்தன.

ஜெயிலர்
இதையடுத்து, ரஜினிகாந்த் நெல்சன் படத்தில் இணைவதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை தயாரிக்கிறது. படையப்பா படத்திற்கு பின் ஜெயிலர் படத்தில் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கிறார் நடிகை ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் மிக முக்கியமான ரோல் நடிக்க உள்ளார். பேட்ட ,தர்பார் படங்களைத் தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

கிளிம்ஸ் வீடியோ
ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஜெயிலர் படத்திலிருந்து கிளிம்ஸ் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இருட்டு அறையில் ரஜினிகாந்த் மிரட்டலான லுக்கில் இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த வீடியோவை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.

லால் சலாம்
ஜெயிலர் படத்தை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்க இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











