Hukkum - ஜெயிலர் செகண்ட் சிங்கிள்.. பத்து மில்லியன் பார்வைகளை கடந்த ஹுக்கும்

சென்னை: Jailer Second Single (ஜெயிலர் இரண்டாவது சிங்கிள்) ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் பாடல் பத்து மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

Jailer Second Single Hukkum Crossed 10 Million Views

கட்டாய ஹிட்: இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதாக கடந்த சில காலமாகவே பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்து தனனி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த்.

முதல் சிங்கிள்: நெல்சன் திலீப்குமாருக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதால் நிச்சயம் இந்தப் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும்படிதான் படத்தின் ரிலீஸ் தேதியோடு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ உணர்த்தியதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். முதல் சிங்கிள் பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இரண்டாவது சிங்கிள்: முதல் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றாலும் அது ரஜினிக்கான பாடல் இல்லை என்ற கருத்து எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. பாடலில் முழுக்க முழுக்க ரஜினியை புகழும்படி வரிகள் அமைந்திருந்தன.

விஜய்க்கு எச்சரிக்கை?: அதுமட்டுமின்றி பாடலின் வரிகளை கேட்ட ரஜினி ரசிகர்கள் இந்த வரிகள் மூலம் விஜய்க்கு ரஜினி எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் என கூறினர். அதனையடுத்து விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதலிலும் ஈடுபட்டனர். இதற்கிடையே மாலத்தீவுக்கு சென்ற ரஜினிகாந்த் ஹுக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்புவை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்து மில்லியன் பார்வைகள்: இந்நிலையில் ஹுக்கும் பாடல் யூட்யூபில் சாதனை படைத்துள்ளது. அதன்படி அந்தப் பாடலை இதுவரை பத்து மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் எப்போதும் ஒரே தலைவர்தான் என்பதை ரஜினிகாந்த் இந்தப் பாடலின் மூலம் நிரூபித்துவிட்டார். ஜெயிலர் படம் கண்டிப்பாக சக்கைப்போடு போடும் என தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X