எங்கப்பாவை வீரப்பன் கடத்திய போது.. ரஜினி சார் செய்த உதவி இருக்கே.. சிவராஜ்குமார் நெகிழ்ச்சி!

சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், அந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பெரிய தூணாகவே மாறியுள்ளார்.

சிவராஜ்குமாரை ரஜினிகாந்த் உதவி கேட்டு சந்திக்கும் காட்சியில் ஜாஃபர் சாதிக் கத்தியை காட்டி ரஜினிகாந்தை மிரட்ட, சிவாண்ணா சைலன்ட்டாக அவருக்கு பாடம் புகட்ட ஃபேனில் கட்ட விட்டு சுத்த விடும் காட்சியே தியேட்டரில் அலப்பறையை கிளப்பியது.

Jailer Shiva Rajkumar opens up how Rajinikanth helps his family when Veerappan kidnapped Rajkumar

அதே போல கிளைமேக்ஸ் காட்சியில் முத்துவேல் பாண்டியனின் மனைவி மற்றும் மருமகளை போட்டுத் தள்ள வில்லன் வர்மா அனுப்பிய ஆட்களை துவம்சம் செய்ய நரசிம்மா ரோலில் சிவராஜ்குமார் என்ட்ரி கொடுக்கும் சீன் தியேட்டரையே தெறிக்கவிட்டது.

கர்நாடகாவிலும் வசூல் வேட்டை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் என ஜெயிலர் படத்தில் மூன்று சிங்கங்களின் கர்ஜனை பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளது.

கர்நாடகாவில் சிவராஜ்குமார் நடித்துள்ள ஜெயிலர் படத்தை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அங்கேயும் மிகப்பெரிய கலெக்‌ஷனை வாரிக் கொடுத்துள்ளனர்.

ரஜினியை நேரில் சந்திக்கப் போறேன்: ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன நிலையில், ரஜினிகாந்த் உங்களுக்கு போன் போட்டு பேசினாரா என சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர் கேட்க, அவர் அவுட் ஆஃப் தி ஸ்டேஷன் என இமய மலைக்கு போயிருப்பதை குறிப்பிட்ட சிவராஜ்குமார், சென்னைக்கு வந்ததும் முதல் ஆளாக சூப்பர்ஸ்டாரை பார்க்கத் தான் சென்னையிலேயே தங்கி இருக்கிறேன் என பதில் அளித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Jailer Shiva Rajkumar opens up how Rajinikanth helps his family when Veerappan kidnapped Rajkumar

அப்பா ராஜ்குமாரை கடத்திய போது: கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நிறைய உதவிகளை செய்துள்ளார். அதையெல்லாம் எப்பவுமே மறக்க மாட்டோம் என நன்றியுடன் சிவராஜ்குமார் பேச பேச கோலிவுட் ரசிகர்கள் கூஸ்பம்ப் ஆகி உள்ளனர்.

கேப்டன் மில்லரில் வேட்டை: ஜெயிலர் படத்தில் இரண்டு சீன்களில் மட்டுமே வந்து சென்ற சிவராஜ்குமார் அடுத்ததாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் வில்லனாக நடித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவிலேயே கொஞ்ச காலம் செட்டில் ஆகிவிடுவார் என தெரிகிறது.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டீசரிலேயே சிவராஜ்குமார் வெயிட்டு காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X