Jailer Show Cancelled: "அந்த காட்சியால் ஜெயிலர் ஷோ கேன்சல்..” உக்கிரமான ரஜினி ரசிகர்கள்!
லண்டன்: ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது.
சென்னை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என உலகம் முழுவதும் வெளியான ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை உலகின் பல நாடுகளில் வெளியிட முடியாமல் படக்குழு திணறி வருகிறதாம்.
இதற்கெல்லாம் காரணம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் ஷோ கேன்சல் : சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன் கூட்டணியில் முதன்முறையாக உருவான ஜெயிலர், நேற்று ரிலீஸானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலரை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தது படக்குழு. இதனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் ஜெயிலர் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று வெளியான ஜெயிலர் படத்துக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பிலிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. பக்கா தலைவர் படமாக உருவாகியுள்ள ஜெயிலர், ஆக்ஷன், டார்க் காமெடி என செம்ம மஸ்ஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதியில் பூனையாக இருக்கும் சூப்பர் ஸ்டார், இரண்டாம் பாதியில் புலியாக மாறி வில்லன்களை பந்தாடுகிறார்.
இதனால், படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும்படி இயக்கியுள்ளார் நெல்சன். கடைசியில் இந்த ஆக்ஷன் காட்சிகளே ஜெயிலர் படத்துக்கு வினையாக போய் முடிந்துவிட்டது. இந்தியாவில் சென்சாரில் தப்பித்த இந்த வன்முறை காட்சிகள், சில வெளிநாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஒருசில நாடுகளில் இடைவேளை காட்சிகள் ரீ-எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், லண்டனில் ஜெயிலர் பட காட்சிகளே ரத்து செய்யப்பட்டுள்ளதாம். அதிகம் வன்முறை காட்சிகள் இருப்பதால் இதனையெல்லாம் காரணம் காட்டி படத்தை வெளியிடவில்லையாம். ஷோ ஆரம்பிக்கும் நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். லண்டன் மட்டுமின்றி நார்வே, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் ஜெயிலர் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் ஜெயிலர் ஷோ கேன்சல் செய்யப்பட்டது குறித்து படத்தை விநியோகம் செய்தவர்கள் விளக்கம் கொடுக்காதது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இமயமலை சென்றுள்ள ரஜினியின் புகைப்படங்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஜெயிலர் சூப்பர் ஹிட் ஆனதால் ரஜினியின் இமயமலை பயணமும் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











