Kaavaala: நானெல்லாம் ’போட்டுத்தாக்கு’ பாட்டுகே.. காவாலா பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் குத்தாட்டம்!
சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் பல ஆண்டுகள் கழித்து இணைந்து நடித்துள்ள நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் கடைசியாக தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக "காவாலா" பாட்டுக்கே குத்தாட்டம் போட்டு சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் இருந்து இதுவரை ரம்யா கிருஷ்ணன் லுக் எப்படி இருக்கும் என்றே நெல்சன் வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு அவரது கதாபாத்திரத்தை சர்ப்ரைஸாக வைத்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளார் என்றும் தமன்னா ஒரு சின்ன ரோலில் தான் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழிவாங்க காத்திருக்கும் நீலாம்பரி: படையப்பா படத்தின் கிளைமேக்ஸில் படையப்பா அடுத்த ஜென்மம் எடுத்து வந்து உன்னை பழிவாங்குவேன்னு சொல்வீங்களே, அதை எப்போ மேம் செய்வீங்க என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் கேட்க, ஜெயிலர் படத்தை பாருங்க அதற்கான விடை இருக்கு என ரம்யா கிருஷ்ணன் செம ஷாக் கொடுத்துள்ளார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் செம அழகாக கலந்துக் கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடை ஏறி எப்பவுமே உங்க அழகும் ஸ்டைலும் உங்களை விட்டுப் போகாது என ரஜினிகாந்தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசியதும் மேடையே அதிர்ந்து போனது.

போட்டுத் தாக்கை மறக்க முடியுமா?: நடிகை ரம்யா கிருஷ்ணன் படிக்காதவன் படத்தில் இருந்து பல படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் பாபா படத்திலும் அதே கதாபாத்திரத்தில் கேமியோவாக வந்து சென்ற நிலையில், ஜெயிலர் படத்தில் என்ன செய்ய காத்திருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், காவாலா பாட்டுக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட ரீலை பார்த்த ரசிகர்கள் அப்பவே சிம்புவுடன் குத்து படத்தில் "போட்டுத் தாக்கு" பாட்டுக்கு அந்த ஆட்டம் போட்டவராச்சே ரம்யா கிருஷ்ணன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

காவாலா பாட்டுக்கு செம டான்ஸ்: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்காக ரெடியான ரம்யா கிருஷ்ணன் தனது குழுவுடன் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நிலையில், செம சூப்பர் மேம் என ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











