Jailer Success Meet: ஜெயிலர் சக்சஸ் மீட் வராத தமன்னா, ரம்யா கிருஷ்ணன்... பயில்வான் சொன்ன காரணம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு முதல் வாரம் நல்ல ஓபனிங் கிடைத்தது.

இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் சக்சஸ் மீட் நடைபெற்றது.

 Jailer Success Meet: Bayilvan Ranganathan comments on Tamannaah, Ramya Krishnan

இதில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் கலந்துகொள்ளாதது குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.

தமன்னா, ரம்யாகிருஷ்ணன் இருவருமே ஒரேமாதிரி தான்: கடந்த ஒரு வாரமாகவே ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் ஃபீவர் தான் உச்சக்கட்டத்தில் இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 Jailer Success Meet: Bayilvan Ranganathan comments on Tamannaah, Ramya Krishnan

முதல் வாரத்தில் 375 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது ஜெயிலர். இதனையடுத்து சென்னை பிரசாந்த் தியேட்டரில் ஜெயிலர் சக்சஸ் மீட் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றிருந்ததால் இதில் அவர் கலந்துகொள்ளவில்லை. அதேபோல், அனிருத்தும் பிஸியான ஷெட்யூல் காரணமாக பங்கேற்கவில்லை. நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, சூப்பர் சுப்பு என ஜெயிலர் டீமில் இருந்து சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

இயக்குநர் நெல்சனை தவிர மற்றவர்கள் யாருமே ஜெயிலரில் முக்கியமான நபர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜெயிலர் சக்சஸ் மீட் குறித்து பலவிதமான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ஜெயிலர் நிகழ்ச்சியில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் கலந்துகொள்ளாதது குறித்து பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.

 Jailer Success Meet: Bayilvan Ranganathan comments on Tamannaah, Ramya Krishnan

ஜெயிலர் சக்சஸ் மீட்டில் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ளாதது மிகவும் வேதனையானது. தமிழ் நடிகையான ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அசத்திய போது, இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் தான் அவரை தூக்கிவைத்துக் கொண்டாடினர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு ஜெயிலர் விழாவில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல வரவில்லை என விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். படையப்பா படத்திற்குப் பின்னர் ரஜினியுடன் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், ஜெயிலரில் சூப்பர் ஸ்டாருக்கு மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தமிழ் இயக்குநர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தமன்னா. அவராவது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றிருக்க வேண்டும். அவரும் ரம்யா கிருஷ்ணன் போல சினிமா செய்தியாளர்களை மறந்துவிட்டதாக பயில்வான் கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள தமன்னா, காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டது ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X