Jailer Success: ரஜினி, நெல்சனுக்கு கார்... நீங்க மண்சோறு சாப்பிடுங்க... ரசிகர்களுக்கு சவுக்கடி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது.

நெல்சன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானர் படமாக வெளியான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் சுமார் 1.5 கோடி மதிப்புடைய கார்களை பரிசளித்துள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன்.

இதனை கொண்டாடி வரும் ரஜினி ரசிகர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Jailer Success: Netizens trolled Rajinikanth fans for Jailers victory

ரஜினி ரசிகர்களுக்கு சவுக்கடி: சூப்பர் ஸ்டார் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்தது. தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி FDFS காட்சிகளுக்கு அனுமதி இல்லையென்றாலும், ரசிகர்கள் முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டரில் காத்திருந்து ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்

இதனால், ஜெயிலர் வெளியான திரையரங்குகளில் திருவிழா போல இருந்தது. அதுமட்டும் இல்லாமல் ஆக்‌ஷனில் மிரட்டிய ரஜினி, ஜெயிலர் படத்தை ரசிகர்களுக்கு தரமான ஃபேன் பாய் சம்பவமாக கொடுத்திருந்தார். முதன்முறையாக இணைந்த சூப்பர் ஸ்டார் - நெல்சன் கூட்டணி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருந்தது. முன்னதாக இந்தப் படம் வெளியாகும் முன்பு, ஜெயிலர் வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்தனர்.

Jailer Success: Netizens trolled Rajinikanth fans for Jailers victory

இந்தச் சம்பவம் தற்போது நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தலைவருக்கு 1.5 கோடி மதிப்பிலான BMW X7 காரை பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன். அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு ஜெயிலர் லாபத்திலும் ஷேர் கொடுத்திருந்தார். அதேபோல், இயக்குநர் நெல்சனுக்கும் செக் கொடுத்த கலாநிதி மாறன் 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய Porsche காரையும் பரிசாக கொடுத்தார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், ரஜினி, நெல்சனுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ரஜினி ரசிகர்களும் 'தலைவரு நிரந்தரம்' என கமெண்ட்ஸ் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஜெயிலர் வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

"ரஜினிக்கு BMW X7 கார்... நெல்சனுக்கு PORSCHE கார்... அப்படியானால் மண்சோறு சாப்பிட்ட களிமண் மண்டையன்களுக்கு? அடுத்த படம் ஓட வேண்டி சாப்பிடுவதற்கு ஒரு டன் மண்!" என கேப்ஷன் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X