Jailer: வெறித்தனம் காட்டும் சூப்பர் ஸ்டார்... மிரட்டல் லுக்கில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் மல்டி ஸ்டார்ஸ் ஜானரில் உருவாகியுள்ளது.
ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் மிரட்டல் போஸ்டர் ஒன்று இணையத்தை கலங்கடித்து வருகிறது.

மிரட்டும் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் போஸ்டர்: அண்ணாத்த படத்திற்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள மூவி ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை ஹிட்டாக்கிய நெல்சன், அடுத்து விஜய்யின் பீஸ்ட்டை ஃபிளாப்பாக கொடுத்தார். இதனால், ஜெயிலர் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒராண்டாக நடந்து வந்த ஜெயிலர் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் ஆகியோர் தங்களது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக காணப்படும் இயக்குநர் நெல்சன், விரைவில் ஜெயிலர் அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மினி டீசருடன் வெளியாகி வைரலாகியிருந்தது. அதன்படி ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள ஜெயிலர் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே இம்மாதம் இறுதிக்குள் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து டீசரும் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. ஃபேன்மேட் போஸ்டரான இதனை ரசிகர ஒருவர் கிரியேட் செய்துள்ளார். ரத்தக் கறையுடன் பல கூர்மையான வாள்கள் தொங்கிக் கொண்டிருக்க, அதன் நடுவே செம்ம ஸ்டைலாகவும் கெத்தாகவும் நடந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் மிரட்டலான இந்த லுக், ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











