Jailer: ஜெயிலர் ரிசல்ட்... “கலக்கிட்டீங்க கண்ணா..” இமயமலையில் இருந்து நெல்சனுக்கு வந்த ரஜினி மெசேஜ்

சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலை சென்றுவிட்டார் ரஜினி.

ஆனால் அதற்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினருடன் பார்த்து ரசித்தார்.

இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தை ரசிகர்களும் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

இரு தினங்களாக பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதை அடுத்து, இயக்குநர் நெல்சனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துக் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

 Jailer: Superstar Rajini praised Nelson for the success of Jailer

ரஜினியிடம் இருந்து வந்த மெசேஜ்:ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் இரு தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. சூப்பர் ஸ்டார், நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் என மெர்சலான காம்போவில் ரிலீஸான ஜெயிலருக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால், சரியான கம்பேக் கொடுப்பதற்காக காத்திருந்த ரஜினி, தற்போது வெறித்தனமாக சம்பவம் செய்துள்ளார்.

கடந்தாண்டு வெளியான 'விக்ரம்' படம் மூலம் கமல் கம்பேக் கொடுத்ததை போல, ஜெயிலரில் ரஜினியும் கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கம்பேக் மட்டும் இல்லாமல் கதையிலும் விக்ரம் படத்தை ஜெயிலர் காப்பி அடித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. ஆனாலும், ரஜினிக்காக மட்டுமே ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதை பார்க்க முடிகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த நெல்சன், அடுத்து இயக்கிய பீஸ்ட் படத்தால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார். விஜய்யை நம்ப வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன், தளபதியின் கேரியரையே சோலி முடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஜெயிலரில் கமிட்டான நெல்சனுக்கு, கடைசி நேரத்தில் ரஜினி நோ சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

 Jailer: Superstar Rajini praised Nelson for the success of Jailer

இதற்கெல்லாம் சேர்த்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்திருந்தார் ரஜினி. பீஸ்ட் தோல்வியால் ஜெயிலரில் இருந்து நெல்சனை தூக்கிவிடலாம் என பலரும் கூறினார்கள். ஆனால், கதை தான் தோற்கும் நல்ல இயக்குநர் தோற்க மாட்டார் என நெல்சனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தேன் என ரஜினி பேசியிருந்தார். அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக நெல்சன் ஜெயிலரை ஹிட் படமாக கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து ஜெயிலர் ஹீரோ முத்துவேல் பாண்டியனான சூப்பர் ஸ்டார் ரஜினியும் தற்போது நெல்சனை பாராட்டியுள்ளாராம். இதுகுறித்து நெல்சனே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இமயமலை சென்றுள்ள சூப்பர் ஸ்டார், ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து மிரண்டுவிட்டாராம். பின்னர் இமயமலையில் இருந்தே நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பிய ரஜினி, 'கலக்கிட்டீங்க கண்ணா... சென்னை வந்ததும் சந்திப்போம்" எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X