Jailer: முத்துவேல் பாண்டியன் பராக்... ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு... நிம்மதி பெருமூச்சுவிட்ட ரஜினி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

நெல்சன் சேவியர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவானதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Jailer: Superstar Rajinis Jailer shooting has been wrapped

ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வந்தார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வந்த இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளனர், ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்ற நெருக்கடியில் ஜெயிலரில் ரஜினி நடித்துள்ளார். அதேபோல், நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால், இருவருக்குமே ஜெயிலர் படம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பீஸ்ட் தோல்வியடைந்ததும் ஜெயிலர் படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்படலாம் என செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வேகமாக நடைபெற்று வந்த ஜெயிலர் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுப் பெற்றது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அபிஸியலாக அறிவித்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி கேக் வெட்டி ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்ய, அவருடன் தமன்னா, நெல்சன் உட்பட படக்குழுவினர் உடன் இருக்கின்றனர். பிரம்மாண்டமான கேக்கை ரஜினி ஸ்டைலாக கட் செய்ய அனைவரும் கைத்தட்டி செலிப்ரேட் செய்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் விரைவில் ஜெயிலர் படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லால் சலாம் ஷூட்டிங்கில் இருந்த ரஜினியை ஜெயிலர் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நெல்சன் அவசரமாக அழைத்ததாக சொல்லப்பட்டது. இதனால் டென்ஷனான ரஜினி லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், நெல்சன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி தான் ஜெயிலர் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவுப் பெற்றதால் ரஜினி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளாராம். இனிமேல் அடுத்ததாக லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்டால் தலைவர் 170 ஷூட்டிங் செல்ல வசதியாக இருக்கும் என ரஜினி உற்சாகமாக காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X