Jailer: ஜெயிலர் ஸ்பெஷல் ஷோ பார்த்த ரஜினி... தலைவர் ரியாக்ஷன பாருங்க... ட்ரெண்டாகும் வீடியோ!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (ஆக.10) ரிலீஸாகிறது.
இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
ஜெயிலர் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி வெறித்தனமாக கம்பேக் கொடுப்பார் என கோலிவுட்டில் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினியின் ரியாக்ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெயிலர் ஸ்பெஷல் ஷோ பார்த்த: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் கொடுக்காத ரஜினிக்கு ஜெயிலர் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலரில் இருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர் அனைத்துமே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இசை வெளியீட்டு விழாவிலும் சூப்பர் ஸ்டார் டைட்டில், காகம் - பருந்து குட்டி ஸ்டோரி என இன்னும் ஹைப் கொடுத்திருந்தார் ரஜினி. இதனால், ரசிகர்கள் மத்தியில் இரண்டு வாரங்களாகவே ஜெயிலர் ஃபீவர் உச்சம் தொட்டுள்ளது. இதனால், முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
முத்துவேல் பாண்டியன் என்ற செம்ம மாஸ்ஸான கேரக்டரில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், ரசிகர்களிடம் இருந்து ஜெயிலர் படத்திற்கு என்ன ரிசல்ட் கிடைக்கிறது என்பதை பார்க்காமல் இமயமலைக்கு பறந்துவிட்டார் சூப்பர்ஸ்டார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்ற ரஜினி அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா காரணமாக 4 ஆண்டுகள் இமையமலை செல்லவில்லை என்பதால், இப்போது செல்கிறேன் என்றார்.

அவரிடம் ஜெயிலர் குறித்து கேட்டதற்கு, "அதனை நீங்கள் தான் படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்" எனக் கூறிவிட்டு கிளம்பினார். இதனால் ரஜினி ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயிலர் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சியை ஜெயிலர் படக்குழுவினருடன் பார்த்து ரசித்துள்ளார்.
வெள்ளை வேஷ்டி, கறுப்பு டீஷர்ட்டில் ரொம்பவே சிம்பிளாக வருகை தந்த ரஜினி, படம் பார்த்த பின்னர் நெல்சன் உட்பட ஜெயிலர் படக்குழுவினருடன் கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனால் ஜெயிலர் பார்த்துவிட்டு தான் தலைவர் இமயமலை சென்றுள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், ரஜினி ஜெயிலர் ஸ்பெஷல் ஷோ பார்த்த வீடியோவையும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











