Jailer: இன்ஸ்டாவில் ஜெயிலர் அப்டேட்... முதுகை காட்டியபடி தமன்னா பண்ண வேலைய பாருங்க!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் சேவியர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 Jailer: Tamannaah shared a photo of her dance rehearsal for Jailer film on Instagram

இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் அப்டேட் கொடுத்த தமன்னா

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அண்ணாத்த தோல்விக்குப் பிறகு ரஜினி நடித்து வரும் ஜெயிலர் கண்டிப்பாக ஹிட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஜெயிலரை தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களும் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் சூப்பர் ஹிட்டானதால் அவரை நம்பி ஜெயிலர் படத்திற்கு ஓக்கே சொன்னார் சூப்பர் ஸ்டார். ஆனால், நெல்சன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால், ரஜினி - நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் படம் எப்படியிருக்கும் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அபிஸியலாக அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்புடன் மினி டீசர் ஒன்றையும் வெளியிட்டு மாஸ் காட்டினார் நெல்சன். ஆனாலும் மெயின் பிக்சர் வரட்டும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷன் முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அதேநேரம் மற்ற நடிகர்களின் காட்சிகளை எடுத்து வருகிறார் நெல்சன். அதில் முக்கியமான அப்டேட் ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். ஜெயிலர் படத்திற்காக பாடல் காட்சி ஒன்றை மிகப் பிரம்மாண்டமாக எடுக்கவுள்ளாராம் நெல்சன். அதற்காக டான்ஸ் ரிகர்சல் செய்து வருகிறார் தமன்னா.

ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்தபடி முதுகை காட்டிக் கொண்டு டான்ஸ் கோச்சிங்கை பார்த்தபடி நிற்கிறார் தமன்னா. அவருக்கு முன்னால் நெல்சன் அமர்ந்திருக்க, டான்ஸர்கள் பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அதிகமான டான்ஸர்கள் இருப்பதால், இந்தப் பாடல் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்தப் பாடலில் ரஜினியும் நடனமாடுகிறாரா? ஷூட்டிங் எப்போது என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

அதேபோல், ஜெயிலர் படத்தில் தமன்னா ரஜினி ஜோடியாக நடிக்கிறாரா இல்லையா என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்குள் ஜெயிலர் படத்தில் தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட ரஜினி திட்டமிட்டுள்ளாராம். அதன் பின்னர் மற்ற நடிகர்கள் டப்பிங் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி என்பது உறுதியாகவிட்டதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X