Jailer Tickets: வேறலெவல் வெறித்தனம்.. சென்னையில் ஹவுஸ்ஃபுல்.. ஜெயிலர் ப்ரீ புக்கிங் வசூல் இவ்வளவா!

சென்னை: ஜெயிலர் படத்துக்கு திரையிட்ட எந்தவொரு திரையரங்கிலும் முதல் நாள் காட்சிக்கு டிக்கெட்டே கிடைக்காது என்கிற நிலை தான் உருவாகி உள்ளது. அமெரிக்கா முதல் சென்னை வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் மாட்டப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக சென்னையில் ஒட்டுமொத்த முதல் நாள் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Jailer Tickets gets housefull on Chennai and First Day Box office will be huge

இன்று பிவிஆர் திரையரங்க டிக்கெட்டுகளின் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், அந்த பக்கம் முழுவதுமே அனைத்து தியேட்டர்களிலும் ரெட் கலர் மட்டுமே காட்சியளிக்கிறது. மேலும், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் எத்தனை கோடிக்கு ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது என்கிற தகவல்களும் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை தலைகால் புரியாமல் ஆக்கி உள்ளன.

உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்: ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாரையும் அவரது ரசிகர்களையும் உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்ல சூப்பர் சுப்பு எழுதிய சூப்பரான வரிகளான உன் அலும்ப பார்த்தவன், உங்கப்பன் விசில கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் என்பதற்கு எடுத்துக்காட்டாக 5 தலைமுறை ரசிகர்கள் ஜெயிலர் படத்தை பார்க்க ஃபுல் மோடில் ரெடியாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜெயிலர் திரைப்படத்தின் புக்கிங் எங்கெல்லாம் தொடங்கப்பட்டதோ அங்கெல்லாம் இதுவரை எந்தவொரு ரஜினிகாந்த் படத்துக்கும் இல்லாத அளவுக்கு டிக்கெட் முன் பதிவு களைகட்டி வருகிறது. அனைத்து தியேட்டர் ஓனர்களும் பொங்கலுக்குப் பிறகு செம சந்தோஷத்தில் கல்லா கட்டி வருகின்றனர்.

சென்னையில் ஹவுஸ்ஃபுல்: தமிழ்நாட்டின் தலைநகர் மற்றும் கோலிவுட்டின் கோட்டையான சென்னையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறுகின்றனர்.

Jailer Tickets gets housefull on Chennai and First Day Box office will be huge

மேலும், வியாழக்கிழமையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் (சுதந்திர தினம்) என தொடர்ந்து 5 நாட்கள் டார்கெட் வைத்து பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் 70 முதல் 80 சதவீதம் வரை நிரம்பி வருகிறது.

20 கோடி வசூல் இப்பவே: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஆன்லைன் ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் மட்டும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் 20 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஊர்களில் நேரடியாக தியேட்டரில் டிக்கெட் வாங்கி ரசிகர்கள் பார்க்கும் வசூலை எல்லாம் கணக்கிட்டால் தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய நம்பர் ஒன் படமாக ஜெயிலர் மாறும் என்றும் உலகளவில் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை ஜெயிலர் படம் கடக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X