Jailer Making: அடேங்கப்பா.. அந்த டிரக் பறக்குற சீனை எப்படி எடுக்கிறாங்க பாருங்க.. ஜெயிலர் அலப்பறை!

சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமே மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் தான். அதிலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பெரிய டிரக் சாலையில் வர அதற்கு முன்னதாக செம மாஸாக நடந்து வரும் காட்சியும் அந்த டிரக் அவருக்கு முன்னாடி பல்டி அடித்து மண்டியிடுவது போல் விழும் காட்சிகள் தியேட்டரில் எலிவேஷன் சீனாக அமைந்திருந்தது.

இந்நிலையில், அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அந்த காட்சியை வெளியிட்டு ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளார்.

Jailer truck flip stunt scene making video out now

ஜெயிலர் வசூல்: ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியானாலும் சன் பிக்சர்ஸ் திரைப்படம் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை 525 கோடியுடன் நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிரடியாக 4 வாரத்திலேயே அமேசான் பிரைம் ஓடிடியில் ஜெயிலர் படத்தை வெளியிட்ட நிலையில், தியேட்டரில் கூட்டமே குறைந்து விட்டது.

9 பேர் தான்: சமீபத்தில், தனது பெற்றோர்கள் திருமண நாளை ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துடன் கொண்டாட நினைத்த ஒரு இளம் பெண் டிக்கெட் புக் செய்து தியேட்டருக்கு சென்ற நிலையில், வெறும் 9 பேரு தான் இருக்காங்க, ஷோ எல்லாம் போட முடியாது என சொல்லி காட்சியை ரத்து செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த அதுகுறித்து பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

லண்டனில் ஜாலி: இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்திய சந்தோஷத்தை குடும்பத்துடன் லண்டனில் செலிபிரேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது டீமையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார் நெல்சன் என்றும் கூறுகின்றனர்.

Jailer truck flip stunt scene making video out now

பல்டி அடித்த டிரக்: ஜெயிலர் படத்தில் அந்த டிரக் பல்டி அடிக்கும் காட்சியை ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் எவ்வளவு தொலைவில் இருந்து கச்சிதமாக வைடு ஆங்கிளில் ரியல் ஸ்டன்ட்டாக ஷூட் செய்தோம் என்பதை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக தற்போது அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் படத்துக்கு பெரிய பலமாக இருந்த அனிருத் அந்த வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X