‘ஜெயிலர்’ அப்டேட்: ரஜினி இனி வேற லெவல்.. படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்.. பார்க்கத்தான போறீங்க

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர்' படத்தை இயக்குகிறார்.

விரைவில் சூட்டிங் தொடங்கவுள்ள 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், கடந்த சில வருடங்களாக புதிய இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். 'லிங்கா' படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித்துடன் 'கபாலி', 'காலா' என ஹிட் கொடுத்த அவர், அடுத்ததாக கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' என தாறுமாறான ஃபேன் பாய் சம்பவங்களை செய்து வந்தார்.

அண்ணாத்த

அண்ணாத்த

அதேவேகத்தில் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருந்தார் ரஜினி. நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என பெரும் நட்சத்திரப் பட்டாங்களுடன் உருவாகிய இத்திரைப்படம், பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. ஆனாலும், வசூலில் குறை வைக்காத 'அண்ணாத்த' ரஜினி அடுத்து ஒரு சூப்பர்ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

நெல்சனுடன் கூட்டணி

நெல்சனுடன் கூட்டணி

ஆனாலும், விமர்சனங்களைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத சூப்பர் ஸ்டார், அண்ணாத்த படக்குழுவினரை கவனிக்க வேண்டிய வகையில் செம்ம வெயிட்டாக கவனித்தார். அதேநேரம், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநர் நெல்சனுடன் புதிய கூட்டணி அமைத்தார். சன் பிக்சர்ஸ், நெல்சன், அனிருத் என மாஸ் கூட்டணியில் ரஜினியின் அடுத்த படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், 'பீஸ்ட்' படத்தின் தோல்வி ரஜினியை யோசிக்க வைத்தது.

ஜெயிலர் டைட்டில்

ஜெயிலர் டைட்டில்

ஆனாலும், உறுதியாக முடிவெடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உடனடியாக படத்தின் டைட்டிலையும் அறிவித்தார். இறுதியாக படத்தின் தலைப்பு 'ஜெயிலர்' என்ற அறிவிப்பு சிறிய க்ளிம்ப்ஸுடன் வெளியாக, ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் எனவும் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகின.

ரஜினியுடன் ஹாலிவுட் பிரபலம்

ரஜினியுடன் ஹாலிவுட் பிரபலம்

சூப்பர் ஸ்டாரின் புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், ரசிகர்களின் முதல் எதிர்பார்ப்பு அவரது லுக் எப்படி இருக்கும் என்பது தான். இப்போது அதுபற்றி தரமான அப்டேட் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. ஹாலிவுட் நடிகர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோருக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருப்பவர் ஆலிம் ஹக்கிம். இவர்தான் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் செய்யப் போவதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

புதுசு கண்ணா புதுசு

புதுசு கண்ணா புதுசு

'ஜெயிலர்' படத்தில் ரஜினியை இதுவரை யாரும் பார்த்திடாத லுக்கில் மாற்றப் போகிறாராம் ஆலிம் ஹக்கிம். ரஜினியின் இந்த ஹேர் ஸ்டைலும் லுக்கும், அமர்க்களமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது ட்வீட்டரில் ஷேர் செய்துள்ள ஆலிம் ஹக்கிம், "ஒரேயொரு ராஜா ரஜினியுடன் பணிபுரிய உள்ளது புதுமையானது" என, ஹேப்பி மோடில் கேப்ஷன் போட்டுள்ளார். ஆக மொத்தம் 'ஜெயிலர்' படத்தின் ரஜினியின் தரமான சம்பவம் இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X