Jailer Update: ஜெயிலர் ரிலீஸ் அப்டேட் கொடுக்க ரெடியான சன் பிக்சர்ஸ்... ரஜினி ரசிகர்கள் வெறித்தனம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் மிக முக்கியமான அப்டேட் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ஜெயிலர் ரிலீஸ் அப்டேட்:சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அண்ணாத்த தோல்விக்குப் பின்னர் ரஜினி நடித்து வரும் திரைப்படமாக ஜெயிலர் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ஜெயிலர் படத்தை ரஜினி அதிகம் எதிர்பார்த்துள்ளார். ரஜினி ரசிகர்களும் இந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஜெயிலரில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். சென்னை, கடலூர், கொச்சி, ஹைதராபாத் என பல இடங்களில் நடந்து வந்த ஜெயிலர் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.
இதனையடுத்து ஜெயிலர் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். ஜூன் மாதம் அல்லது விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஜெயிலர் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் அப்டேட் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. காத்திருப்பு முடிவுற்றது இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் அப்டேட் என குறிப்பிட்டுள்ளது. அதனால், இது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியாக தான் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், ஆகஸ்ட் 25 அல்லது செப்டம்பர் 14 என இந்த இரண்டு தேதிகளில் ஒருநாளாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டால் போதும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் வெளியானதும் உடனடியாக தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் இந்தப் படம் மீதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினி.


Click it and Unblock the Notifications











