Vinayakan: விமான நிலையத்தில் போதையில் அலப்பறை.. ஜெயிலர் பட வில்லன் கைது!

சென்னை: பிரபல மலையாள வில்லன் நடிகரான விநாயகன் ஹைதாபாத் விமானநிலையத்தில் மது அருந்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஹைதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நடிகர் விநாயகன், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் திமிரு, காளை, சிலம்பாட்டம் , மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 2016 ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான கம்மாட்டி பாடம் படத்தில் கங்கா என்னும் கதாபாத்திரவில் நடித்திருந்திருந்த விநாயகனின் நடிப்பு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் விநாயகன் பெற்றார்.

jailer vinayakan arrested

மலையாள நடிகன் விநாயகன்: தமிழில் இவர் விஷால் நடித்த திமிரு படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். அதன் பின் பல படத்தில் நடித்துள்ள விநாயகன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சக்கைப்போடு போட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாரத்தில் மலையாளம் கலந்து பேசும் அவரது பேச்சு மொழியும் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.

அடுத்தடுத்து தமிழ் படத்தில்: குறிப்பாக, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்து மனசிலாயோ என மலையாளத்தில் பேசும் வசனம் திரையரங்கில் அப்லாசை அள்ளியது. இந்த படத்தின் மூலம் அனைவரின் பேவரைட் வில்லனாக மாறிய விநாயகன் தொடர்ந்து மூன்று தமிழ் படங்களில், முக்கிய வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

விநாயகன் கைது: இந்நிலையில், நடிகர் விநாயகன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவா செல்லும் போது இணைப்பு விமானம் ஹைதராபாத்தில் இருந்ததால், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த போது, சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரைல சோதனை செய்தனர். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாகவும், மேலும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவரை கைது செய்து ஹைதராபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X