ஜெயிலரில் 10 ரூபாய் பிச்சை எடுத்ததுக்கு.. பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய வில்லன் விநாயகன்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே வில்லனாக நடித்த நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை விநாயகன் உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஷால் நடித்த திமிர் படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக பிரபல மலையாள நடிகர் விநாயகன் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அதன் பிறகு தனுஷ், பார்வதி நடித்த மரியான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த விநாயகன் திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறுகின்றனர்.
ஜெயிலரில் மிரட்டிய விநாயகன்: மலையாள சினிமாவில் மிரட்டல் வில்லனாகவும் குணசித்ர கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்ந்து வந்த விநாயகன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்ததை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்து ரூபாய் பிச்சை: ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் குடும்பத்தையே போட்டுத் தள்ள மனநல மருத்துவமனைக்கு வர்மன் வெறித்தனமாக வர, அவனது ஆட்களையும் சிலைகள் கடத்திச் சென்ற கன்டெயினரையும் பிடித்து விட்டதாக ரஜினிகாந்த் மிரட்ட, விநாயகனை அவங்க குடும்பத்திடம் சென்று 10 ரூபாய் பிச்சையாக வாங்கி வரச் சொல்லுவார்.
உடனடியாக மிரட்டல் வில்லனாக இருந்தாலும், தான் ஒரு சரியான புரொபஸனல் என சொல்லிக் கொள்ளும் விநாயகன் வியாபாரம் கெட்டு விடக் கூடாது என்பதற்காக பிச்சைக்காரனாக மாறி ரம்யா கிருஷ்ணனிடம் காசு கேட்பார். ஆனால், ரம்யா கிருஷ்ணன் கை, கால் நல்லா தானே இருக்கு, எதுக்கு பிச்சை எடுக்கிற எனக் கேட்க, அவரே பாவமாக பிச்சைக் கேட்கிறார் என சொல்லிவிட்டு சிறுவன் ரித்து ராக்ஸ் 10 ரூபாயை தரும் காட்சிக்கு தியேட்டரில் செம விசில் சத்தம் பறந்தது.
ஜெயிலர் படத்தில் கம்மி சம்பளம்: ஜெயிலர் படத்தில் தனது முட்டைக் கண்ணை வைத்தும் முரட்டு உடம்பை காட்டியும் மிரட்டி நடித்த விநாயகத்துக்கு அதிகபட்சமாக சம்பளமாக 35 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த படத்தில் 5 நிமிட கேமியோவில் நடித்த மோகன்லாலுக்கு 8 கோடி ரூபாயும் சிவராஜ்குமாருக்கு 7 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி விநாயகன்: ஜெயிலர் படத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும், ரஜினிகாந்த் படத்தில் நடித்ததன் பின்னர் அவரது மார்க்கெட்டே உயர்ந்து விட்டது. புதிய படத்தில் நடிக்க அதிகபட்சமாக ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் விநாயகன்.
இப்படியொரு வில்லனுக்கு ஒரு கோடி என்ன இரண்டு கோடி கூட தாராளமாக கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











