கீர்த்தி சுரேஷ் அப்பாவை விளாசிய ஜெயிலர் பட வில்லன் விநாயகன்.. என்ன பஞ்சாயத்து தெரியுமா?
சென்னை: ஆடையின்றி சமீபத்தில் பால்கனியில் அமர்ந்து அட்டகாசம் செய்து சர்ச்சையில் சிக்கினார் விநாயகன். மலையாள திரையுலகில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். திமிரு மற்றும் மரியான் என ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த பின்னர் விநாயகன் பரவலாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டு வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தில் உயரிய பதவியில் உள்ளார். மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து மோகன்லால் விலகியது கடந்த ஆண்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஹேமா கமிட்டி மூலம் மலையாள திரையுலகில் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இந்நிலையில், வரும் மே மாதம் முதல் புதிதாக எந்தவொரு படத்தையும் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மாட்டார்கள் என சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தது மற்றொரு சர்ச்சையை அங்கே கிளப்பியுள்ளது.
நடிகர்கள் மீது குற்றச்சாட்டு: மலையாள திரையுலகில் திடீரென நடிகர்கள் எல்லாம் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்குவதாகவும் 100 கோடி வசூல் என தங்கள் படங்கள் வசூல் செய்ததாக போலியாக தம்பட்டம் அடிக்கத் தொடங்கி விட்டதாகவும் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படுவதாகவும் நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறுவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் பேசிய நிலையில், அவருக்கு எதிரான பதிலடியை நடிகர் விநாயகன் கொடுத்துள்ளார்.

சினிமா உங்க அப்பன் வீட்டு சொத்தல்ல: சிலருக்கு மட்டுமே சினிமா உரியது என்று சொல்லக் கூடாது. சினிமா ஒன்றும் உங்க அப்பன் வீட்டு சொத்தல்ல. நடிகர்கள் நினைத்தால் அவங்களோட சொந்த பணத்தை போட்டு படங்களை தயாரித்து விநியோகம் செய்ய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உரியது. இது இந்தியா ஜனநாயக நாடு. ஜெய்ஹிந்த்! என விநாயகன் சுரேஷ் குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உன் பொண்ணுக்கிட்ட சொல்ல முடியுமா?: மேலும், உன்னோட மனைவி நடிகை மேனகா மற்றும் மகள் கீர்த்தி சுரேஷிடம் நடிக்கக் கூடாது என உன்னால் சொல்ல முடியுமா? அதெல்லாம் அவங்க அவங்க விருப்பம். நடிகர்களை படம் தயாரிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எப்படி தடை போடலாம் என வெளுத்து வாங்கியுள்ளார் ஜெயிலர் பட வில்லன்.


Click it and Unblock the Notifications











