ஓவர் குடி.. ஆபாசப் பேச்சு.. வேட்டியை அவுத்து நிர்வாணமாக நின்ற ஜெயிலர் வில்லன்.. பால்கனி வீடியோ!
கொச்சி: மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விநாயகன். இவர் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றால், அவரது கதாபாத்திரத்திற்காகவே படங்களைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவரது அட்டகாசமான நடிப்பிற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதினை கேரள மாநில அரசு வழங்கியுள்ளது. சினிமாவில் இவரது நடிப்புக்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளதோ, சினிமாவைக் கடந்து சமூகத்தில் இவருக்கு அந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. காரணம் ஒவர் போதையில் செய்யும் அலப்பறைகள்தான். போதையில் இவர் செய்த பல சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் இன்றைக்கும் உள்ளது. இப்படியான நிலையில் இவர் போதையில் நிர்வாணமாக நின்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மலையாள சினிமாவில்ன் சர்ச்சைக்குரிய நடிகர் என்றால் அது விநாயகன் தான். சினிமாவில் சிறப்பாக நடிக்கும் அவர், சமூகத்தில் பொறுப்பற்ற நபராகவே உள்ளார். அதாவது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அவரது சுதந்திரம். ஆனால் அவரது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இருக்கும்போது, அவரது நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை என பலரும் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கூட இவர் விமான நிலையத்தில் சட்டை இல்லாமல் அமர்ந்து, விமான நிலைய ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். விநாயகன் எங்கு சென்றாலும், அங்கு போதையில் எதாவது பிரச்னையை இழுத்து விட்டுவிடுகின்றார். இதனாலே பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரை தங்களது படத்தில் கமிட் செய்ய யோசிக்கின்றனர் என கூறப்படுகின்றது. ஓவர் குடி, போதையில் அலப்பறை, மக்களுக்கு தொந்தரவு என தொடர்ந்து மோசமான முன் உதாரணமாக உள்ள, விநாயகன் தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நிர்வாணம்: விநாயகன், தனது வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு அக்கம் பக்கத்து வீட்டாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றார். போதையில் இருக்கும் அவர், தொடர்ந்து ஆபாசமாக பேசுகின்றார். இதுமட்டும் இல்லாமல், தனது வேட்டியை அவிழ்த்துக் கட்டுகின்றேன் என நிர்வாணமாகவும் நின்றுள்ளார். நிலை தடுமாறி கீழேவும் விழுகின்றார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் அதாவது வீடியோவின் ஸ்கீரீன் ஷாட்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அவர் தனது அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகளுடன் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டாரா என்பது குறித்து முழுமையாக எதுவும் தெரியவில்லை.
குற்றச்சாட்டு: இப்படியான நிலையில் நடிகர் விநாயகனின் இந்த செயல் குறித்த வீடியோக்களும், ஸ்கீன் ஷாட்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலரும் அவரது இந்த செயல் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 'விநாயகன் தொடர்ந்து இதுபோல எதாவது செய்து கொண்டேதான் உள்ளார். ஆனால் கேரள மாநில காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றது’ என குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர்: இவர் தமிழில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் வில்லனாக நடித்திருந்தார். இவரது அட்டகாசமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு உதவியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்த இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர். படத்தின் பெரும் வெற்றிக்குப் பின்னர், இவருக்கு சம்பளம் போக, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், காசோலையும் வழங்கினார். கடந்த வாரத்தில் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் படத்திலேயே, இவரது கதாபாத்திரமான வர்மா கதாபாத்திரம் முடிவுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











