Jailer Vs Beast: “ஜெயிலரும் பீஸ்ட்டும் வேற வேற.. விஜய் தான் மாஸ்..” அலப்பறையை கூட்டிய விஜய் ஃபேன்ஸ்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் நெகட்டிவான விமர்சனங்களை எதிர்கொண்டது.

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ரஜினி ரசிகர்களிடம் அலப்பறையை தொடங்கியுள்ளனர் விஜய் ஃபேன்ஸ்.
அலப்பறையை கூட்டிய விஜய் ஃபேன்ஸ்:சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று முதல் ஜெயிலர் திருவிழா தொடங்கியது. உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர், ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸிலும் தரமான சம்பவம் செய்து வருகிறது. இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என மூன்றே படங்களில் கவனம் ஈர்த்த நெல்சனுக்கு, ஜெயிலரில் வாய்ப்புக் கொடுத்தார் ரஜினி. ஆனால், அப்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் சூப்பர் ஹிட் அடித்திருந்தது. அதன் பின்னர் வெளியான விஜய்யின் பீஸ்ட், பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.
இதனால் ஒருகட்டத்தில், ஜெயிலர் படத்தில் இருந்து நெல்சனை விலக்கிவிடலாம் என ரஜினி முடிவுசெய்துவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், நெல்சன் மேல் நம்பிக்கை வைத்து தான் இந்த வாய்ப்பை கொடுத்ததாக ரஜினி பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது வெளியான ஜெயிலர் படத்தை விஜய்யின் பீஸ்ட் உடன் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். பீஸ்ட் மாதிரி ஜெயிலர் மொக்கையாகவில்லை, தலைவர் நிரந்தரம் என விஜய்யை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனைப் பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள், பதிலுக்கு ரஜினியின் ஜெயிலர் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது பீஸ்ட்டும் ஜெயிலரும் வேறு வேறு ஜானர் படங்கள். இந்த இரண்டு படங்களையும் கம்பேர் செய்வதே தவறு. அதேநேரம் ஜெயிலர், பீஸ்ட் இரண்டுமே தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளன. முக்கியமாக பீஸ்ட் படத்தில் விஜய் ரொம்பவே ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால், சில விமர்சகர்கள் வேண்டும் என்றே பீஸ்ட் படத்தை ட்ரோல் செய்தனர். படம் பார்க்கும் முன்பே பீஸ்ட் குறித்து தவறான புரிதல்களுடன் சென்றவர்கள், அதானால் அந்தப் படம் தோல்வியடைந்தது என பதிவிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் டைட்டில், காகம் பருந்து குட்டி ஸ்டோரி என ரஜினி விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்ததாக சொல்லப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











