Jailer VS Leo: ”ஜெயிலர் 4 மணி ஷோ பெர்மிஷன் கேக்கல... லியோ பாக்ஸ் ஆபிஸ் இப்ப சொல்ல முடியாது.!!”

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

முன்னதாக ஜெயிலர் படத்தின் FDFS ஷோவுக்கு அனுமதி கிடைக்காததால் ரஜினி டென்ஷன் ஆனதாக சொல்லப்பட்டது.

அதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார்.

 Jailer VS Leo: Tiruppur Subramaniam explained about Jailer at 4 a.m. FDFS controversy

ஜெயிலர் 4 மணி ஷோ பெர்மிஷன் கேக்கல: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாகும் லியோ, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதாவது முதல் நாளான 19ம் தேதி ஸ்பெஷல் ஷோ உட்பட 6 காட்சிகளும், 20 முதல் 24ம் தேதி வரை மொத்தம் 5 காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், லியோ திரைப்படம் முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதற்கும் இப்போது தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தான் லியோ FDFS என தெரிவித்துள்ளது. இதனிடையே லியோ FDFS அதிகாலை 4 மணி என செய்திகள் பரவியதால், சூப்பர் ஸ்டார் ரஜினி டென்ஷன் ஆனதாக தகவல்கள் வெளியாகின. அதாவது அவரது ஜெயிலர் படத்திற்கு அதிகாலை 4 மணி FDFSக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால், ரஜினி டென்ஷன் ஆனதாக சொல்லப்பட்டது.

 Jailer VS Leo: Tiruppur Subramaniam explained about Jailer at 4 a.m. FDFS controversy

இதுபற்றி தமிழ் பிலிமீபீட் யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்த திருப்பூர் சுப்ரமணியம், இதெல்லாம் சுத்த பொய் எனக் கூறியுள்ளார். அதாவது ஜெயிலர் FDFS காட்சிக்கு சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அனுமதி கேட்கவில்லை எனவும், இதுபோன்ற பொய்யான தகவல்களால் ரஜினிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றுள்ளார். அதேபோல், லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதும் அரசியல் அழுத்தம் இல்லை என்றும், அது விஜய் - தயாரிப்பாளர் சேர்ந்து எடுத்த முடிவு எனவும் கூறியுள்ளார்.

முக்கியமாக லியோ படத்திற்கு தரமான ஓபனிங் இருக்கும் எனக் கூறியுள்ள திருப்பூர் சுப்ரமணியம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றுள்ளார். லியோ வெளியாகி விமர்சனம் வெளியான பின்னர் தான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றியும் தெரியவரும் என விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X