போன மாசம் கமல், இந்த மாசம் ரஜினி, சிவகார்த்திகேயன்.. தேவயானி கணவர் இப்படி கழுவி ஊத்துறாரே.. அய்யய்யோ
சென்னை: தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் தமிழில் சில படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். அவையும் பெரிய ஹிட்டெல்லாம் இல்லை. சில படங்களில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில மாதங்களாக அவர் கொடுத்துவரும் பேட்டி சர்ச்சையை கிளப்பிவருகின்றன. இந்நிலையில் இப்போது கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
நீ வருவாய் என படத்தை இயக்கியபோது நடிகை தேவயானியுடன் ஏற்பட்ட பழக்கம்; ராஜகுமாரன் இயக்கிய இரண்டாவது படமான விண்ணுக்கும் மண்ணுக்கும் சமயத்தில் எல்லாம் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு தேவயானியின் வீட்டில் சுத்தமாக சம்மதம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார் தேவயானி. இந்தத் திருமணம் ஒட்டுமொத்த திரைத்துறையினரிடமும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது.
நடிகராக ராஜகுமாரன்: படங்கள் இயக்கி தோல்வி கண்ட அவர் திருமணத்துக்கு பிறகு ஒட்டுமொத்தமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார். அதேசமயம் சில படங்களில் நடித்தார். சந்தானம் நடித்த வல்லனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குநராக பெரிய பெயரை பெறாத அவர்; நடிகராகவும் சோபிக்க முடியவில்லை. பிறகு ஒட்டுமொத்தமாக சினிமாவுக்கு மூட்டை கட்டிவிட்டார்.

ராஜகுமாரனின் பேட்டி: சமீப காலமாக ராஜகுமாரன் கொடுக்கும் பேட்டிகள் அனைத்தும் சர்ச்சையை கிளப்பிவருகின்றன. கடந்த மாதத்தில் இயக்குநர் மகேந்திரன் பற்றி பேசுகையில், 'ராம நாராயணன் 100 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார். ஆனால் ஒன்று இரண்டு படங்கள் இயக்கிய மகேந்திரனை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் மகேந்திரனின் ஒரு படத்தைக்கூட பார்த்ததில்லை. அவர் படங்களை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமுமில்லை.
கமல் பற்றியும்: சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அதில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சாதாரண படம் அவ்வளவுதான். கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு பிட்டு கதைதான் அந்த ஒட்டுமொத்த படமும். மனைவியின் தங்கையை தன் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் முழு பட கதையே. இது ஒரு பெரிய விஷயமா?.. அதற்காகவா இரண்டரை மணி நேரம் படம்" என பேசியிருந்தார். அதேபோல் நடிகர் கமல்ஹாசன் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை என்றும் பேசியிருந்தார்.
ஜெயிலர், அமரன்: அந்தப் பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலைமை விபரீதமாவதை புரிந்துகொண்ட அவர்; தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என சொல்லி தப்பித்தார். இந்நிலையில் இப்போது தனியார் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், "ஜெயிலர் படத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை. இடைவேளையோடு எழுந்து வந்துவிட்டேன். அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மக்களை ரஜினி என்ன மேன்மைப்படுத்திவிட்டார். தியேட்டர்காரர்கள் வாழ்வதற்கு ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா உள்ளிட்டோரெல்லாம் வேண்டும்தான்.
ஒன்றுமே புதிது இல்லை: அதற்காக அவர்கள் படங்கள் நடிக்கலாம். சிவகார்த்திகேயனின் அமரன் பார்த்தேன். அதில் என்ன புதிதாக இருந்தது. சிவாஜி நடித்த ரத்த திலகம் படம்தான் அமரன். அந்தப் படத்தில் சாய் பல்லவையை ரசிப்பதற்காகத்தான் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்றார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











