Jailer: ஒரு ஆயிரம் கோடி கலெக்ட் பண்ணிக் கொடுத்துருவல.. நெல்சனை மேடையில் நெளிய வைத்த ரெடின் கிங்ஸ்லி!
சென்னை: 375 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயிலர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வசூல் செய்த அறிவிப்பு வெளியான நிலையில், ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியும் சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில், கலந்து கொண்டு இயக்குநர் நெல்சன், நடிகர் வசந்த் ரவி, மிர்ணா, சுனில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பேசினர்.அப்போது, நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும் போது, எப்படியும் ஒரு ஆயிரம் கோடி கலெக்ட் பண்ணிக் கொடுத்துருவலன்னூ தனது ஸ்டைலில் நெல்சனை பார்த்துக் கேட்க அரங்கமே சிரித்து விட்டது.

ஜெயிலர் சக்சஸ் மீட்: படம் ரிலீஸ் ஆன மறுநாளே சக்சஸ் மீட் வைத்தால் அதற்கு அடுத்த நாள் அந்த படம் ஓடுமா என்கிற சந்தேகத்தில் வைக்கின்றனர் என கலாய்த்து வரும் சூழலில், பொறுமையாக ஒரு வாரம் கழித்து இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாக மாறிய நிலையில், ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது.
ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்திற்கு பக்க பலமாக இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக்கிய ரசிகர்கள் என அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
வட இந்தியாவில் ரஜினிகாந்த்: ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாளில் இமய மலைக்கு கிளம்பிச் சென்ற ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரமாக ஜெயிலர் படக்குழுவினரே சந்தோஷத்தில் திளைத்து வரும் நிலையில், பாபா குகையில் தியானம், ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் சந்திப்பு என எப்போதும் போலவே தனி ரூட்டில் பயணித்து வருகிறார். சக்சஸ் மீட்டில் பேசிய அனைவருமே ரஜினி சார் சீக்கிரம் சென்னைக்கு வாங்க என்றே பேசினர்.
ரெடின் கிங்ஸ்லி ஜாலி பேச்சு: கோலமாவு கோகிலா படத்தில் இருந்து நெல்சன் படங்களில் பயணம் செய்து வரும் ரெட்டின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். டாக்டர், பீஸ்ட் என நடித்து அசத்திய ரெட்டின் கிங்ஸ்லி ஜெயிலர் படத்தில் திவ்யா எனும் கே கேரக்டரில் நடித்து காமெடியில் மிரட்டி இருப்பார்.

1000 கோடி வசூல்: பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் 1000 கோடி வருமா என கேட்டதை போலவே தற்போது ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ரெடின் கிங்ஸ்லி, கடந்த ஒரு வாரமாக குலாப்ஜாமுன் ஜீராவை எடுத்து காதுல ஊத்தின மாதிரி இருக்கு என்றும் எங்க பார்த்தாலும் 100 கோடி, 100 கோடின்னு தினமும் சொல்லிட்டே இருக்காங்க, எப்படியும் ஒரு 1000 கோடியை கலெக்ட் பண்ணி கொடுத்துருவலன்னு ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனை பார்த்து சிரித்துக் கொண்டே ரெடின் கிங்ஸ்லி கேட்க, ஆளை விடுப்பா சாமி என பெரிய கும்பிடாக போட்டு விட்டார் இயக்குநர் நெல்சன்.
அதன் பின்னர், ரஜினி சார் சீக்கிரம் வாங்க, இங்க எல்லாருமே உங்களுத்தான் வெயிட்டிங் என்றும் பேசி அரங்கத்தை சிரிப்பொலியில் ஆழ்த்தி விட்டு கிளம்பி விட்டார்.


Click it and Unblock the Notifications











