600 கோடி கிளப்பில் ஜெயிலர்.. இந்தியாவில் மட்டும் சூப்பர்ஸ்டார் பண்ண பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் தெரியுமா?
சென்னை: ஏற்கனவே எந்திரன், 2.0 என எவர்க்ரீன் பாக்ஸ் ஆபிஸ் இண்டஸ்ட்ரி ஹிட் ரெக்கார்டை வைத்திருந்த ரஜினிகாந்த் மீண்டும் தன்னுடைய படை பலத்தை ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகனத் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. 20வது நாளான இன்றும் ஜெயிலர் திரைப்படம் பல திரையரங்குகளில் 30 சதவீதம் நிறைந்த அரங்குகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஜெயிலர் படத்தின் வசூல் மேலும், அதிகரித்துள்ள நிலையில், 600 கோடி கிளப்பில் விரைவில் ஜெயிலர் இணையும் என்பது உறுதியாகி உள்ளது.
600 கோடி கிளப்பில் ஜெயிலர்: உலகளவில் வசூல் மழையை குவிந்து வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த வார வீக்கெண்ட் உடன் 600 கோடியை அசால்ட்டாக தாண்டும் எனக் கூறுகின்றனர். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி மற்றும் சந்தானத்தின் கிக் உள்ளிட்ட படங்கள் தான் இந்த வாரம் வெளியாகின்றன.
அடுத்த வாரம் ஷாருக்கானின் ஜவான் ரிலீஸ் ஆகும் போது ஜெயிலர் அதிகபட்சமாக அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், இந்த வார முடிவுடன் 600 கோடி கிளப்பில் இணைந்து இமாலய சாதனையை ஜெயிலர் படைக்கும் என்கின்றனர்.
இந்தியாவில் 350 கோடி வசூல்: ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், தமன்னா, சுனில் என ஏகப்பட்ட மாநிலங்களில் இருந்து பிரபல நடிகர்கள் நடித்த ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் வேறலெவல் வசூல் வேட்டையை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இந்தியாவில் 326 கோடி ரூபாயை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் 350 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படத்துக்கு ஹைப்: விஸ்வரூபமான வசூல் வேட்டையை ஜெயிலர் படம் நடத்தி உள்ள நிலையில், ரஜினிகாந்தின் லால் சலாம் மற்றும் தலைவர் 170 உள்ளிட்ட படங்களுக்கு இப்பவே ஜெட் வேகத்தில் ஹைப் மற்றும் பிசினஸ் எகிறியுள்ளது என்கின்றனர்.
அடுத்தடுத்து இரண்டு படங்களையும் ரஜினிகாந்தை வைத்தே லைகா நிறுவனம் கச்சிதமாக அறுவடை செய்யப்போவது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











