கர்நாடகாவிலும் கிங்கான ரஜினிகாந்த்.. கேஜிஎஃப் 2வுக்கே செம டஃப்.. களைகட்டும் ஜெயிலர் ப்ரீ புக்கிங்!

பெங்களூர்: ஜெயிலர் படம் இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் டிக்கெட் புக்கிங் உலகம் முழுவதும் தீயாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் முதல் நாள் அதிகாலை காட்சிகள் கேஜிஎஃப் 2 படத்தின் அதிகாலை காட்சிகளையே ஓவர்டேக் செய்யும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், முதல் நாள் வசூல் கர்நாடகாவிலேயே டபுள் டிஜிட்டை கடக்கும் என அட்டகாசமான அப்டேட்கள் வெளியாகி சன் பிக்சர்ஸ் மற்றும் ஜெயிலர் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

Jailer will surpass KGF 2 First Day Box Office at Bengaluru

பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா: 72 வயதிலும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்த் ராஜ்ஜியம் நடைபெற்று வருவதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். யாருமே அவரது சூப்பர்ஸ்டார் பட்டத்தை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்றும் இப்பவும் ரஜினிகாந்த் தான் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா என்றும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, ஓமன் என ஓவர்சீஸ் முழுவதும் ஜெயிலர் படத்துக்கான ப்ரீ புக்கிங் ஃபயராக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சூப்பர்ஸ்டார் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

கேஜிஎஃப் 2வுடன் போட்டி: பெங்களூருவில் நேரடி கன்னட படமான கேஜிஎஃப் 2வுக்கு கிடைத்த அளவுக்கு அதிகாலை காட்சிகள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கும் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

அதிகப்படியாக ஆகஸ்ட் 10ம் தேதி 155 அதிகாலை சிறப்பு காட்சிகள் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் முன்பதிவு தொடங்கி ஹவுஸ்ஃபுல்லாக நிரம்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் 2 நாட்களில் மேலும், அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி நடந்தால் கேஜிஎஃப் 2வின் அதிகாலை ஸ்க்ரீனிங்கை வீழ்த்தி விடும் என்றும் கூறுகின்றனர்.

Jailer will surpass KGF 2 First Day Box Office at Bengaluru

ஆர்ஆர்ஆர் எல்லாம் அப்புறம் தான்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு 144 காட்சிகள் தான் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது என்கின்றனர்.

மேலும், இந்த ஆண்டு அதிக வசூலை கன்னடத்தில் ஈட்டிய கிரந்தி படம் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்த நிலையில், அந்த வசூலை ஜெயிலர் முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 3 முதல் 4 கோடிகள் வரை ப்ரீ புக்கிங்கே கர்நாடகாவில் ஜெயிலர் படம் வசூல் செய்து இருக்கிறதாம்.

Jailer will surpass KGF 2 First Day Box Office at Bengaluru

சிவராஜ்குமார் இருக்காரே: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் இருப்பது தான் அங்கேயும் இப்படியொரு எதிர்பார்ப்பு எகிறி இருப்பதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ரஜினிகாந்த் ஒரு பக்கம், சிவராஜ்குமார் மறுபக்கம் என கர்நாடகாவில் ஜெயிலர் படத்துக்கு டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்பனையாக காரணிகளாக அமைந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

இதே போல கேரளாவிலும் நடிகர் மோகன்லால் நடித்துள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் டிக்கெட் புக்கிங் வேகமெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படம் இந்தியில் பெரியளவில் வசூல் செய்யாத நிலையில், ஜெயிலர் படம் தமன்னா, ஜாக்கி ஷெராஃப் இருப்பதால் அங்கேயும் நல்ல ஓபனிங் செய்து விட்டால், மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X