Jailer Box Office Day 3: தொடர்ந்து வசூலில் மிரட்டும் ஜெயிலர்... 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 10ம் தேதி வெளியானது.

ரஜினி ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் முதல் வாரத்துக்கான டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிடைத்த வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Jailer Worldwide Box Office Day 3: Rajinis Jailer crossed the Rs 130 crore mark in just Three days

ஜெயிலர் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ்: இந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அண்ணாத்த எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் ரஜினியின் அடுத்தப் படமான ஜெயிலர் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. ரஜினியின் 169வது படமாக உருவான இதனை நெல்சன் இயக்கினார், சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன், அனிருத், சன் பிக்சர்ஸ் காம்போவில் உருவான ஜெயிலர், 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.

ஏற்கனவே இந்தப் படத்திற்கு இருந்த ஹைப் காரணமாக, ஆகஸ்ட் 10 முதல் 15ம் தேதி வரையிலான டிக்கெட் புக்கிங் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஒருகட்டத்தில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 12 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி ரூபாய் வசூல் செய்த ஜெயிலர், இந்தியா முழுவதும் 49 கோடி வரை கலெக்‌ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதேபோல், முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்ததாம். இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் 30 கோடி ரூபாயும், உலகின் மற்ற நாடுகளில் 10 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றும் ஜெயிலர் படத்தின் வசூல் குறையவில்லையாம். அதன்படி, 3வது நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில் ஜெயிலர் திரைப்படம் முதல் 3 நாட்களில் 130 முதல் 140 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக மூன்றாவது நாளில் அமெரிக்காவில் மட்டும் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது ஜெயிலர். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதோடு, சுதந்திரதின விடுமுறை இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. இதனால், ஜெயிலர் படத்தின் முதல் 5 நாள் வசூல் 250 முதல் 300 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X