Jailer Box Office Day 4: பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டும் ஜெயிலர்... 4வது நாள் வசூல் இத்தனை கோடியா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது.
பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியான ஜெயிலருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜெயிலருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும், ரஜினி ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், 4 நாட்களில் உலகம் முழுவதும் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ்: கடந்த வாரம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரசிகர்களால் எதிர்பார்த்ததைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கம்பேக் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் தலைவரின் பக்கா கமர்சியல் படமாகவும் ஃபேன் பாய் சம்பவமாகவும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனாலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் என்ட்ரியாகும் சீன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
அதேபோல், மோகன்லால் வரும் காட்சிகளுக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம் தாறுமாறாக உள்ளதாம். இந்நிலையில், ப்ரீ புக்கிங் மூலம் படம் வெளியாகும் முன்பே 12 கோடி வரை வசூலித்தது ஜெயிலர். மேலும், முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ஜெயிலர் வசூல் 100 கோடி ரூபாயை கடந்தது.
சனிக்கிழமையான மூன்றாவது நாளும் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. இதனால் 40 முதல் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் 4வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் மட்டும் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் வசூல் 24 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இதனால் முதல் நான்கு நாட்களில் ஜெயிலர் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 250 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதாவது உலகம் முழுவதும் 250 முதல் 300 கோடி வரை கலெக்ஷன் செய்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் நாளையும் (ஆக.15) விடுமுறை தினம் என்பதால் ஜெயிலர் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும், அபிஸியலாக 300 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











