எதிர்காலத்தில் திமுக இருக்காது.. பிறந்தநாளில் விஜய் தலையில் ஐஸ்ஸைத் தூக்கி வைத்த ஜெய்.. இதுவல்லவோ வாழ்த்து

சென்னை: நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி, தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சி. ஜோசப் விஜய். இவர் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இன்று சட்டமன்ற கூட்டத் தொடர் என்பதால், பிறந்த நாள் கொண்டாட்டங்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் நடிகர் ஜெய் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தை அப்போதைய ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து நடத்தி வந்தார். குறிப்பாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே, இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே... ஒன்னு திமுக.. இன்னொன்னு தவெக. தீய சக்தி திமுக வேண்டுமா? தூய சக்தி தவெக வேண்டுமா? ஸ்டாலின் சாரா? இல்லை.. இந்த விஜய்யான்னு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க என்று தனது எல்லா பிரசாரங்களிலும் கூறிக் கொண்டு வந்தார்.

Jai s Birthday Wish to CM Vijay Sparks Buzz Only TVK Will Remain in Future

முதலமைச்சர் விஜய்: ஆனால் திமுகவோ, விஜய்யை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல், நேரடியாக பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து பிரசாரத்தை நடத்தி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில் முதலமைச்சராக விஜய் தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அகில இந்தியத் தலைவர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Jai s Birthday Wish to CM Vijay Sparks Buzz Only TVK Will Remain in Future

பிறந்த நாள் வாழ்த்து: இந்நிலையில் நடிகரும் விஜய்யின் தீவிர ரசிகருமான ஜெய் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெய், பேசுகையில், " ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே என்று விஜய் அண்ணா கூறுவார். ஆனால் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் இப்படி ஒரு போட்டியே இருக்காது போலத் தோன்றுகிறது. தவெக மட்டும் தான் இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது" என்று பேசி உள்ளார். இவரது இந்த பேச்சு குறித்து நெட்டிசன்கள் பலரும், முதலமைச்சர் விஜய்க்கே ஐஸ் வைக்கும் அளவுக்கு வாழ்த்து சொல்லி இருக்காருப்பா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Read more about: chief minister jai vijay politics dmk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X