For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜல சமாதி… இந்த வருஷம் எம்.எஸ்.பாஸ்கருக்கு தேசிய விருது நிச்சயம்

|
புது அவதாரம் எடுத்த எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை: ஜலசமாதி படம் பிறப்பு முதல் இறப்பு வரையிலான மனித வாழ்வின் இயல்பை பிரபலிக்கும். பார்வையாளர்களுக்கு பிரச்சனையின் உண்மைத் தன்மையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காக இதில் கமர்சியல் விஷயங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்தப் படத்தில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இப்படத்தின் இயக்குநர் வேணு நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தப்படத்தில், குடும்பத்திற்காக தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஒரு முதியவராக சிறப்பாக நடித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். சமூகத்தை அப்படியே புரட்டி போடப் போகும் இப்படம் மலையாளத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். அவரின் நடிப்பு அபாரம். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. சின்னத்திரையில் தொடங்கிய அவரது கலை பயணம் இன்று பெரிய திரையில் பல படங்களில் பிரமாதமான யதார்த்தமான நடிப்பு மூலம் குணச்சித்திர நடிகராக வளம் வருகிறார்.

ஆடை நாயகி அமலா பாலின் அடுத்த அதிரடி! நீங்களே பாருங்க! கிரங்க வைக்கும் போட்டோஸ்!

துச்சமாக நினைக்கும் இளையதலைமுறை

துச்சமாக நினைக்கும் இளையதலைமுறை

இன்று நம் கலாச்சார மாற்றங்களால் பழைய பாரம்பரியமான விஷயங்கள் மட்டுமல்லாது வயதில் மூத்தவர்களைக் கூட துச்சமாக மதித்து தூக்கி எறியும் கலாச்சாரத்திற்கு நம் நாடு வேகமாக மாறி வருகிறது. உபயோகமில்லாத நோய்வாய்ப்பட்ட எதையும் மக்கள் வைத்து கொள்வதை விரும்புவதில்லை அது கால்நடைகளாகட்டும் அல்லது மனிதர்களாகட்டும் அனைவருக்குமே ஒரே நிலைப்பாடு தான்.

முதியோர்கள் குடும்பச்சுமையா

முதியோர்கள் குடும்பச்சுமையா

மக்கள் வயதாகும் போது அவர்கள் குடும்பத்தினர் அவர்களை ஒரு சுமையாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிடுவார். அதிலும் நோய்வாய்ப்பட்டவர்கள் என்றால் அவர்களின் மருத்துவ செலவுகள் அதிகமாகும் போது அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டு விடுகிறார்கள். இல்லாவிட்டால் தெருவில் கொண்டுபோய் போட்டுவிடுகின்றனர்.

சேது எழுதிய அடையாளங்கள்

சேது எழுதிய அடையாளங்கள்

ஏராளமான டாக்குமெண்ட்ரி படங்கள், ஷார்ட் ஃபிலிம், தொலைக்காட்சி பணிகள் போன்ற பல விஷயங்களுக்காக இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பல பாராட்டுகளை பெற்றவர் தயாரிப்பாளர் வேணு நாயர். கேரளாவின் மிகவும் பிரபலமான நாவலாசிரியர் சேது எழுதிய அடையாளங்கள் புத்தகத்தின் கதையை தழுவி ஜலசமாதி எனும் படத்தை உருவாக்கியுள்ளார் வேணு நாயர்.

யாரும் முன்வரவில்லை

யாரும் முன்வரவில்லை

அவரே தயாரித்து, இயக்கியும் உள்ளார். இதற்காக பலரை அணுகியும் யாரும் முன் வராததால் நானே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். சமூகத்தில் மிகவும் குறைவாக பேசப்படும் பிரச்சனை என்றாலும் அதனை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான முயற்சியை இப்படத்தின் மூலம் எடுத்துள்ளார்.

தேசிய விருது நிச்சயம்

தேசிய விருது நிச்சயம்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். அவரின் நடிப்பு அபாரம். இந்த வேடத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. அவரின் அற்புதமான நடிப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். சின்னத்திரையில் தொடங்கிய அவரது கலை பயணம் இன்று பெரிய திரையில் பல படங்களில் பிரமாதமான யதார்த்தமான நடிப்பு மூலம் குணச்சித்திர நடிகராக வளம் வருகிறார்.

ஆதங்கம் தீரும்

ஆதங்கம் தீரும்

அவரது நடிப்பிற்கு இதுவரையில் தேசிய விருது வழங்கப்படாதது அதிர்ச்சியாகவே உள்ளது. அந்த ஆதங்கம் நிச்சயம் இந்த படம் மூலம் தீரும் என்கிறார் வேணு நாயர். இப்படத்தில் அவருடன் விஷ்ணு பிரகாஷ், வஞ்சியூர் பிரவீன் குமார், சந்தோஷ் குருப், ஷியாம் கிருஷ்ணன், லிஜா ராஜன், அகில் குமார், வர்ஷா மற்றும் சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

மலை கிராமத்தில் சக்கரை ஆலையில் தான் வேலை செய்வார்கள் அப்படி வேலை பார்க்கும் கிராம மக்கள் 60 வயது கடந்த பின்னர் ஓய்வு பெறுவார். ஆனால் அதற்கு முன்னர் அவர்கள் இறக்க நேர்ந்தால் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அந்த வேலை கொடுக்கப்படும். தனது குடும்ப உறுப்பினருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த சக்கரை ஆலையில் வேலை செய்யும் தொழிலாளி தானே இறப்பார் அல்லது குடும்பத்தினரால் இயற்கை மரணம் போல கொல்லப்படுவார்.

தியாகம் செய்யும் எம்.எஸ்.பாஸ்கர்

தியாகம் செய்யும் எம்.எஸ்.பாஸ்கர்

அப்படித்தான், குடும்பத்திற்காக தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் ஒரு முதியவராக சிறப்பாக நடித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர். சமூகத்தை அப்படியே புரட்டி போடப் போகும் இப்படம் மலையாளத்தில் உருவாகி வருகிறது. இதன் வரவேற்பை பொறுத்து தமிழிலும் வெளியிடப்படும் என்றனர் பட குழுவினர். இருப்பினும் மலையாள படத்தில் தமிழில் சப் டைட்டில் போடப்படும் என்கிறன்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை

பிறப்பு முதல் இறப்பு வரை

இந்த ஜலசமாதி படம் பிறப்பு முதல் இறப்பு வரையிலான மனித வாழ்வின் இயல்பை பிரபலிக்கும். பார்வையாளர்களுக்கு பிரச்சனையின் உண்மைத் தன்மையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காக இதில் கமர்சியல் விஷயங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் குறித்தும் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தீவிரமாக சிந்திப்பார்.

English summary
Jala Samadhi film will highlight the nature of human life from birth to death. It does not include any commercial material to bring to the audience the true nature of the problem.Director of the film Venu Nair said that M.S.Bhaskar will definitely get a National Award for his role in the film.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more